பக்கம் எண் :

132பாரதம்ஆரணிய பருவம்

6.-அதுகண்டுஇந்திராணி, 'ஒருமானுடனோடுஒக்கஉண்
ணுதல் தகுமோ?' என்று சினந்து கூறுதல்.

அன்னதுநிகழ்ந்தகாலையவன்றிருத்தேவிகண்டு
துன்னியகோபச்செந்தீ விழியுகச்சிலசொற்சொன்னாள்
மன்னியபுவியில்வைகு மானுடமன்னன்வந்துன்
தன்னுடனொக்கவுண்ணத்தக்கதோவுரைத்தியென்றே.

     (இ-ள்.)அன்னது நிகழ்ந்த காலை- அத்தன்மையதான செய்கை
நடந்தபொழுதில்,-அவன்திரு தேவி - அவ்விந்திரனது அழகிய
மனைவியானஇந்திராணி,-கண்டு- (அதனைப்)பார்த்து, துன்னிய கோபம்
செம் தீ விழி உக - பொருந்திய கோபத்தினாலாகியசிவந்த நெருப்புப்பொறி
கண்களின் வழியே சிந்தாநிற்க, 'மன்னியபுவியில் வைகும் - பொருந்திய
பூலோகத்திலே வசிக்கின்ற, மானுட மன்னன் - மனிதனாகியஓரரசன், வந்து
- (இங்கே) வந்து, உன்தன்னுடன் ஒக்க உண்ண தக்கதுஓ - உன்னுடனே
ஒக்க இருந்து உண்ணுதல் தகுதியுடையதோ?  உரைத்தி - சொல்வாய்,'
என்று-,சில சொல் சொன்னாள்- (இந்திரனைநோக்கிச்) சில சொற்களைக்
கூறினாள்;(எ-று.)

     கோபச்செந்தீவிழியுக என்பதற்கு-கோபமிகுதியால்நெருப்புப் போல
கண்கள் மிகச்சிவக்க என்று கருத்து.  புவி என்னுஞ்சொல், வடமொழியில்
ஏழாம்வேற்றுமை.  மானுடன்=மாநுஷன்.  மானுட மன்னன் - உயர்திணைப்
பெயரீறு விகாரமாயிற்று;[நன்-உயிர்-9]உண்ணத்தக்கதோ -
உண்ணத்தகுமோ;தகாதென்னும் பொருளைத்தந்ததனால்,ஓகாரம் -
எதிர்மறை.  செந்தீவிழியுகப்பொறாதுசொற்றாள்என்றும் பாடம்.    (182)

7.-இந்திரன்அருச்சுனனது பெருமையைச் சுட்டிக்காட்டி
மானுடனென்றுஇவனையிகழலாகா தெனல்.

என்றலுங்கடவுள்வேந்த னிருபுயந்துளங்கநக்கு
மன்றலந்துளபமாயோன் மைத்துனனெனக்குமைந்தன்
கொன்றையஞ்சடையானோடுமமர்புரிகுரிசிறன்னை
நன்றியின்மனிதனென்றிங் கிகழ்வதோநங்கையென்றான்.

     (இ-ள்.)என்றலும் - என்று (இந்திராணி) சொன்னவளவில்,-கடவுள்
வேந்தன் - தேவராசனானஇந்திரன், இரு புயம் துளங்க நக்கு - (தனது)
இரண்டுதோள்களும் குலுங்கும்படி பெருஞ்சிரிப்புச் சிரித்து, (அவளை
நோக்கி), 'நங்கை- பெண்களுட் சிறந்தவளே!  மன்றல் அம் துளபம்
மாயோன் மைத்துனன் - வாசனையையுடையஅழகிய திருத்துழாய்
மாலையையுடையஸ்ரீகிருஷ்ண பகவானது அத்தைகுமாரனும், எனக்கு
மைந்தன் - என்னுடைய மகனும், கொன்றை அம் சடையானோடுஉம்அமர்
புரி குரிசில் தன்னை- கொன்றைப்பூமாலையையுடையஅழகிய
(கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய பரமசிவனுடன் போர்செய்த
வீரனுமாகிய