பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்133

இவ்வருச்சுனனை,நன்றி இல் மனிதன் என்று - (தேவர்களுக்கு உரிய)
சிறப்பு இல்லாத சாதாரண மனிதனென்று எண்ணி, இங்கு இகழ்வதுஓ -
இவ்வாறு (நீ) நிந்திப்பது முறையோ?'என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     கடவுள் -சாதியொருமை: இங்கே, கடவுளர் என்று பொருளாதலின்;
இனி, தேவனாகியஅரசன் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக்கி
யுரைத்தலுமாம்.  இங்கே, சிரிப்பு - இந்திராணி அருச்சுனனைஇகழ்ந்தது
காரணமாகவும் உண்டாயிற்று: "எள்ளலிளமைபேதைமை மடனென்,
றுள்ளப் பட்ட நகை நான்கென்ப" என்றார், ஆசிரியர் தொல்காப்பியனார்.
துளபம் - துளஸீ: இது-அதனாலாகியமாலைக்குக்கருவியாகுபெயர்.
மாயோன்-மாயையையுடையவன்; மாயையாவது - கூடாததையுங்
கூட்டுவிக்குந் திறம்: அகடி தகடநாசாமர்த்தியம்;பிரபஞ்ச காரணமான
பிரகிருதியுமாம்: இனி, மாயன் - ஆச்சரியகரமான குணங்களையும்
செயல்களையும்உடையவனென்றுமாம்: கருநிறமுடையவன் என்றும்
கொள்ளலாம்.  மாயன்-மாயோன் எனச் சிறுபான்மை விகுதியீற்றயலகரம்
ஓவாயிற்று.  மைந்து - இளமை, அழகு, வலிமை;அதனையுடையவன்-
மைந்தன்.  கொன்றை என்னும் மரத்தின்பெயர், அதன் பூவினாலாகிய
மாலைக்குஇருமடியாகுபெயர்.  நங்கை - பெண்பாற் சிறப்புப் பெயர்: இது
- அண்மைவிளியாதலின், இயல்பாய்நின்றது;[நன்- பெயர் 56.]
மன்றலந்துளபம், கொன்றையஞ்சடை என்றவற்றில், அம்-
சாரியையெனவுமாம். சடையானோடும்என்றதில், உம்மை-உயர்வு சிறப்பு;
அசைநிலையாகவுமாம்.

     பாசுபதம்பெறத் தவநிலைநின்றஅருச்சுனனைஅழிக்கத்
துரியோதனனேவலால் மூகாசுரன் பன்றி வடிவாய்வந்தான்.  அவன் மேல்
வேடவடிவாய்வந்த சிவபெருமான் அம்பெய்தான்.  அது அப்பன்றியைப்
பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்று எய்துவராகத்தை விழுத்தினான்.
அது காரணமாக அவ்விருவர்க்கும் போர் உண்டாயிற்று.  அப்போரிற்
பரமசிவன் எதிரியது வில் நாணியை அறுக்க, பார்த்தன் அவ்விற்கழுந்தால்
கடவுளது முடியில் அடித்தா னென்பது, கீழ்ச்சருக்கத்துக் கதை.     (183)

8.-சிறப்புக்குஅருச்சுனனேற்றவனேயென்றுஅமரர்கள்
சொல்லி, அவனைவரவழைக்கக் காரணம்
இருக்கவேணுமே யெனஇந்திரனைவினாவல்.

ஆங்கதுகேட்டதேவ ரடிபணிந்தரியவேந்தே
பூங்கொடிதருவோடன்று புவியினிற்கவர்ந்தவீரற்கு
ஓங்குமைத்துனனேயாகி லிதனின்மற்றுறுதியுண்டோ
ஈங்கிவன்புகுந்தசூழ்ச்சிக் கேதுவுண்டாகுமென்றார்.

     (இ-ள்.) ஆங்குஅது கேட்ட - அப்பொழுது (இந்திரன் சொன்ன)
அவ்வார்த்தையைச் செவியுற்ற, தேவர் - தேவர்கள், அடிபணிந்து-
(இந்திரனது) பாதங்களைவணங்கி, (அவனைநோக்கி), அரிய வேந்தே-
கிடைத்தற்கு அரிய எம்மரசனே! (இவ்வருச்சுனன்),