பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்135

     (இ-ள்.) தேவி செப்பிய உரைஉம்-இந்திராணி சொன்ன (ஆக்ஷேப)
வார்த்தையையும், தேவர்தம் உரைஉம்-(இந்திராதி) தேவர்கள் சொன்ன
(சமாதான) வார்த்தையையும், தா வரும்புரவி திண் தேர்தனஞ்சயன்-தாவிப்
பாய்ந்துவருகின்ற குதிரைகளைப் பூட்டிய வலிய தேரையுடைய அருச்சுனன்,
கேட்டு-, தொழுது-(இந்திரனைக்) கைகூப்பி அஞ்சலிசெய்து, (அவனைநோக்கி),
'விமல-குற்றமற்றவனே! யாவர்உம் பரவும் உன்தனுடன்-மூவுலகத்தாருந்
துதிக்கின்ற உன்னுடனே, ஓர் ஆசனத்து இருந்து-(மனிதனொருவன்)
ஏகாசனத்திலே வீற்றிருந்து, மேவரு முடிஉம் சூட-பொருந்திய (உன்)
கிரீடத்தையுந் தரிக்க, பொறுக்கும்ஒ-தகுமோ?' என்று சொன்னான்-; (எ-று.)

     பொறுக்குமோ-இந்திராணி பொறுப்பளோ எனினுமாம்: செய்யுமென்முற்று,
பெண்பாலிற் சென்றது; (நன்-வினை-29.) செப்பிய, செப்பு-தெலுங்கினின்றும்
வந்து வழங்கிய திகைச்சொல். தா-தாவு என்பதன்விாகரம்; தாவி
என்பதன்விகாரமாகக் கொள்ளினுமாம். தாவரு, மேவரு என்றவற்றில்,
வரு-துணைவினை; இனி, தாவு அரு, மேவு அரு எனப்பிரித்து -
தாவிச்செல்கின்ற அருமையான குதிரை, விரும்பிப்பெறுதற்கு அருமையான
கிரீடம் என்று உரைப்பினும் பொருந்தும். தனஞ்சயன்-செல்வத்தைச்சயித்தவன்;
தருமபுத்திரர் ராஜசூயயாகஞ் செய்யவேண்டிய பொழுது அவர்கட்டளையால்
அருச்சுனன் வடதிசையிற்சென்று பல அரசர்களைவென்று அவர்கள்
செல்வத்தைத் திறயைாகக் கொணர்ந்ததனால், அவனுக்கு இப்பெயர் வந்தது.
(பல்குனன், பார்த்தன், கிரீடி, சுவேதவாகனன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன்,
சவ்வியசாசி, தனஞ்சயன், பாதசாஸனி, நரன் என்பன-இவனது மறுபெயர்களாம்.
                                                           (185)

10.-இதுழதல் ழன்றுகவிகள்-ஒருதொடர்:இந்திரன் அருச்சுனனிடத்து
அவன்பெற்ற மேன்மையையெல்லாஞ்சொல்லி, குருவான தனக்கு
ஒருவாரம் தரவேணுமென்று கேட்டல்.

அவனுரைமகிழ்ந்துகேட்டாங்கமரருக்கதிபன்சொல்வான்
புவனமூன்றினுக்குமுன்னைப்போலொருவீரனுண்டோ
சிவனருள்படையும்பெற்றாய்செந்தழலளித்ததெய்வக்
கவனவாம்புரியுந்தேருங்கணையுங்கார்முகமும்பெற்றாய்.

     (இ-ள்.) அவன் உரை-அவ்வருச்சுனனுடைய (விநயமான) வார்த்தையை,
அமரக்கு அதிபன்-தேவேந்திரன், கேட்டு-, மகிழ்ந்து-களித்து, ஆங்கு -
அப்பொழுது, சொல்வான்-(சிலவார்த்தைகள்) சொல்லுபவனானானன்,
(என்னவென்றால்), புவனம் மூன்றினுக்குஉம் உன்னைபோல்ஒருவீரன்
உண்டுஒ-(சுவர்க்கம் மத்தியம் பாதாளம் என்னும்) மூன்றுலோகங்களிலும்
உன்னைப்போல் ஒரு வீரன் உளனோ? (இல்லை); (நீ), சிவன் அருள்
படைஉம் பெற்றாய் - பரமசிவன் கொடுத்தருளிய பாசுபதம்முதலிய
ஆயுதங்களையும் பெற்றாய்; (அன்றியும்), செம் தழல் அளித்த-செந்நிறமுள்ள
அக்கினிதேவன் கொடுத்த, தெய்வம்-தெய்வத்தன்மையை