பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்157

யால்) செவிடுகளாகச்செய்ய,-(எ-று.)-'புக'எனமேற்கவியில் தொடரும்.

     ஆர்ப்பொலி -இருபெயரொட்டுப் பண்புத்தொகை: ஆர்ப்பு-
பேரிரைச்சல்.  பகிரண்டம் - வடசொற்றொடர். நாற்றிசை-கிழக்கு, தெற்கு,
மேற்கு, வடக்கு என்பன;தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு
என்னும் கோணத்திசை நான்கும் இவற்றில் அடங்கும்.  செவிடு-
செவிப்புலனற்றது: உறுப்புக் குறை எட்டினுள் ஒன்று.            (218)

43.-ஓசையைக்கேட்டஅசுரர் இந்திரன்
பொரவருகிறானென்றுசினங்கொள்ளுதல்.

அந்தவோசை யவுணர்செவிப்புக
முந்தவோடி முடுகிமுறுவலித்து
இந்திரன்பொர வந்தனனென்றுதம்
சிந்தைகன்றி விழியுஞ்சிவந்திட்டார்.

     (இ-ள்.) அந்தஓசை-தேரோசையோடு சேர்ந்த அந்த நாணோசை,
முந்த - (சித்திரசேனனுக்கு) முற்பட, ஓடி - விரைந்து சென்று, அவுணர்
செவி புக-அவ்வசுரர்களது காதிலே நுழைய, - (அவர்கள்), முடுகி-(தம்மில்)
திரண்டு, முறுவலித்து - சிரித்து, இந்திரன் பொர வந்தனன் என்று-
தேவேந்திரன் (தம்மோடு) போர் செய்தற்கு வந்தானாகுமென்று கருதி,
(கோபத்தால்), தம் சிந்தை கன்றி-தங்கள் மனம் வெதும்பி, விழிஉம்
சிவந்திட்டார்-(கண்களும்) சிவக்கப்பெற்றார்; (எ-று.)

    தேவேந்திரன்தேரில் மாதலி பாகனாகச்செலுத்தத்தேர்
அதிர்ந்துவரும்போது, அவுணர், தோற்ற தேவேந்திரனே மீளவும் பொர
வருகின்றானென்றுகருதிச் சினந்தனரென்க.  இங்கே முறுவலித்தல் -
வீரத்திலெழுந்த வெகுளி நகை.  'விழி' என்னும் அஃறிணையெழுவாய்
'சிவந்திட்டார்'என்னும் உயர்திணைமுற்றைக்கொண்டதனால்,விழியும்
சிவந்திட்டார்: திணைவழுவமைதி;இதற்கு "உயர்திணைதொடர்ந்த
பொருள்முத லாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின" என்னுஞ்
சூத்திரம், விதி.                                          (219)

44.-சித்திரசேனனென்றதூதுவன் சில சொல்லுதல்.

போயதூதனுஞ் செம்பொற்புரிசைசூழ்
தோயமாபுரந் தன்னிற்றுதைந்தவம்
மாயவஞ்சர் மறுகவெம்புண்ணின்மேல்
தீயையொப்பன சில்லுரைசொல்லுவான்.

     (இ-ள்) போயதூதன்உம் - (முன்னே புறப்பட்டுச்) சென்ற தூதுவனான
சித்திரசேனனும்,-செம்பொன் புரிசை சூழ் - சிவந்த பொன்னினாலாகிய
மதில்கள் சூழ்ந்துள்ள, தோயமாபுரந்தன்னில்-பெரிய தோயமாபுரத்திலே,
துதைந்த-நிறைந்த, அ மாயம் வஞ்சர்-