வேறு. 57.-அருச்சுனனும்அவர்கள்மீது கணைதூவுதல். அக்கார் முகவீ ரனுமங் கவர்தம் மைக்கார் முகிலென் னவழங் கியதிண் மெய்க்காய் கணைசாபம்விசித் துவிடா நக்கா னிவைநின் றுநவின் றனனே. |
(இ-ள்.) அகார்முகம் வீரன்உம் - வில்வீரனாகியஅவ்வருச்சுனனும், அங்கு-அப்பொழுது, அவர்தம்-அவ்வசுரர்களது, மை கார் முகில் என்ன வழங்கிய-கரிய கார்காலத்து மேகமென்று (உவமை) சொல்லப்பட்ட, திண் மெய்-வலிய உடம்புகளை,காய்-அழிக்கும்படியான, கணை-அம்புகளை, சாபம் விசித்து - வில்லிற் பதியவைத்து, விடா-(அவர்கள்மேற்) பிரயோகித்து, (அவர்களைநோக்கி), நக்கான்-சிரித்து, நின்று-(சலியாமல் எதிர்) நின்று, இவை நவின்றனன்-இவ்வார்த்தைகளைக்கூறினான்;(எ-று)-அவற்றை மேலிரண்டுகவிகளிற் கூறுகின்றார். கார்-பெய்யும்பருவத்துக்கு ஆகுபெயர். எதுகைநயம்நோக்கி 'மெய்க்காய்'என வலி மிக்கது. இதுமுதற்பதினெட்டுக்கவிகள் - பெரும்பாலும் எல்லாச்சீர்களும் மாச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள். 58.-இரண்டுகவிகள்- அருச்சுனனுடைய வீரவாதம். திக்கோடியநுந் திறலும்புகழும் தொக்கோடி யுடற்றுபடைத்தொகையும் கைக்கோடியவெஞ் சிலையின்கணையான் முக்கோடியுமின் றுமுருக்குவனால். |
இதுமுதல்நான்குகவிகள் - ஒரு தொடர். (இ-ள்) நும் -உங்களுடைய, திக்கு ஓடிய - எல்லாத்திசைகளிலும் பரவிய, புகழ்உம்-கீர்த்தியையும், திறல்உம் - யுத்த சாமர்த்தியத்தையும், தொக்கு ஓடி உடற்று படை தொகைஉம் - திரண்டு விரைந்துவந்து (பகைவர்களைப்)பொருது அழிக்கின்ற சேனைகளின்கூட்டத்தையும், மு கோடிஉம் - மூன்று கோடியென்னுந் தொகையையும், கை-(எனது) கையிலுள்ள, கோடிய-வளைந்த,வெம் - கொடிய, சிலையின்- வில்லினின்று (எய்யப்படுகிற), கணையால்- அம்புகளினால்,இன்று - இப்பொழுதே, முருக்குவன் - அழிப்பேன்;(எ-று.) புகழாவது-இம்மைப்பயனாய்இவ்வுலகத்தில் நிகழ்ந்து என்றும் இறவாமல் நிற்குங் கீர்த்தி. படை - ஆயுதமுமாம். (234) 59. | முன்போர்தொறும்வந்து முனைந்துவெரீஇ வென்போகியவிண் ணுறைவீரரலேன் பொன்போலுநும்மே னிபொடிச்செய்திடாப் பின்போகுவனென் றிவைபேசலுமே. |
|