சுனனும், அவ் அவ்எலாம்-அந்த அந்த ஆயுதங்களையெல்லாம், மாற்றி- (தான் விடும் அம்புகளால்) விலக்கி, சரம் மாரி வழங்கினன்-(அவர்கள்மீதும்) பாணவருஷத்தைப் பொழிந்தான்;(எ-று.) அடுக்கிவந்தஅவ் என்பது - சுட்டடியாப்பிறந்த பலவின்பாற் பெயர். (245) 70. | அவன்விட்டசரங் களறுத்தணிதேர் கவனப்பரிபா குகலக்கமுறப் பவனத்துடனங் கிபரந்ததுபோல் துவனித்தவர்வெம் படைதூவுதலும். |
இதுவும், மேற்கவியும் - ஒரு தொடர். (இ-ள்.)அவர்-அசுரர்கள், அவன் விட்ட சரங்கள்-அருச்சுனன் எய்த அம்புகளை,அறுத்து-(தாங்கள் விடும் ஆயுதங்களால்) துணித்துத்தள்ளி, துவனித்து-ஆரவாரஞ்செய்து, அணி தேர் - (அவனது) அழகிய தேரும், கவனம் பரி-விரைந்த நடையையுடைய குதிரைகளும், பாகு - சாரதியும், கலக்கம் உற - கலங்கு தலையடையும்படி, பவனத்துடன் அங்கி பரந்தது போல் - காற்றோடுநெருப்புப் பரவியதுபோல [மிகவும்அதிகமாக விரைவிற் பரவும்படி],வெம் படை தூவுதலும்-கொடிய ஆயுதங்களை,(அவன்மேற்) சொரிந்தவளவில், (எ-று.)-'படையைத்தொட்டான்'என மேற்கவியோடு இயையும். பாகு - யானைதேர் குதிரைகளைச்செலுத்துந் தொழில்;அது, இங்குப் பாகனுக்குப் பண்பாகுபெயர். அங்கி=அக்நி. துவனித்து-த்வநி என்னும் வடமொழிப் பெயர்ச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். (246) 71. | கட்டார்முதுகார் முகவீரனுமுன் கிட்டாவுலகோர் புகழ்கேழ்கிளர்சீர் முட்டாமரைமேன் முனிவன்படையைத் தொட்டானசுரே சர்தொலைந்துகவே. |
(இ-ள்.) கட்டுஆர்-கட்டு அமைந்த, முது கார்முகம்-பழமையான காண்டீவத்தையுடைய, வீரன்உம் - அருச்சுனனும், முன் கிட்டா- (அவர்களுக்கு) எதிரில் நெருங்கி, அசுர ஈசர் தொலைந்துஉக-அவ்வசுரத் தலைவர்கள்அழிந்து விழும்படி, உலகோர் புகழ் - எல்லாவுலகங்களிலுமுள்ளார் யாவருந் துதிக்கின்ற, கேழ் கிளர் - ஒளி விளங்குகின்ற, சீர்-சிறப்பையுடைய, முள் தாமரை மேல் முனிவன்- முள்ளையுடையதாமரைமலரின் மீது தோன்றிய பிரமதேவனது, படையை - அஸ்திரத்தை, தொட்டான்-பிரயோகித்தான்;(எ-று.) முதுகார்முகம் -மிகப்பழையதாயிருந்தும் எந்தப்போரிலுந் துணிபடாத வலிமை யுடையதென்றபடி. (247) |