பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்183

படுத்தற்றொழிற்குக்கருவியெனினுமாம்.  கொண்டு - மூன்றாம்வேற்றுமைச்
சொல்லுருபு.  கண்டங் காணுதலாவது - பயன்படாதபடி அழித்தல்.    (266)

91.-அற்றகுறைஅவயவத்தோடு கூடியதனால்முக்கோடி
யசுரச்சேனையும்மீண்டும் போர்க்குவர, அருச்சுனன்
சிந்தை கொள்ளல்.

அற்றனகுறைகளெல்லா மவயவம்பொருந்திமீண்டும்
உற்றனமூன்றுகோடி சேனையுமுருத்தெழுந்த
வெற்றிவேற்குமரனன்ன விசயனுங்கைசலித்து
மற்றிதற்கென்செய்வேனென் றினைவுடன்மதிக்குமேல்வை.

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ - ள்.)அற்றன குறைகள் எல்லாம் - அவயவங்களறுபட்ட
குறையுடம்புகளெல்லாம், அவயவம் பொருந்தி மீண்டுஉம் உற்றன -
(அறுக்கப்பட்ட) அவ்வவ்வுறுப்புக்களோடு கூடி மறுபடியும் போர்செய்யப்
பொருந்தினவாய், மூன்று கோடி சேனைஉம்- முக்கோடியசுர சைனியமும்,
உருத்து எழுந்த - கோபித்து (அருச்சுனன்மீது) எழுந்தன;(அதுகண்டு),
வெற்றிவேல் குமரன் அன்ன விசயன்உம் - ஜயத்தைத்தருகின்ற
வேலாயுதத்தையுடைய சுப்பிரமணியனையொத்த அருச்சுனனும், கை சலித்து
- கை தளர்ந்து, மற்று இதற்கு என் செய்வேன் என்று - இனி இதற்கு யாது
செய்வேன் என்று, இனைவுடன்- வருத்தத்துடனே, மதிக்கும் ஏல்வை-
ஆலோசிக்குஞ் சமயத்தில்,-  (எ - று.)-'அசரீரியுரைத்தது' என மேலிற்
கவியோடு இயையும்.

     உற்றன -முற்றெச்சம்.  மற்று - இங்கே, பின் என்னும் பொருளது.
இனைவு- தொழிற்பெயர்:வு-விகுதி.                         (267)

92.-இரண்டு கவிகள்- அசரீரி அசுரர்களின் வரத்தையும்
அவர்களைக்கொல்லவேண்டிய உபாயத்தையும் கூறுவன.

வென்றிகொள்வீரவாகை வீரவில்விசயகேளாய்
தென்றிசைமறலிபாலித் தீயவஞ்சகர்முன்பெற்ற
வன்றிறற்படையுமிக்க வரமுமெய்வலியுமுண்டால்
என்றசரீரிபின்னு மின்னவையுரைத்ததம்மா.

     (இ - ள்.)அசரீரி - அரூபியாகிய  ஆகாசவாணி,-(அருச்சுனனை
நோக்கி), 'வென்றிகொள் - ஜயத்தை யடைவதற்குக்காரணமான, வீரம் -
பராக்கிரமத்தைக் குறிக்கின்ற, வாகை-வாகைப்பூ மாலையையும்,வீரம் வில் -
வலிய வில்லையுமுடைய,விசய - அருச்சனனே! கேளாய் - (யான்
சொல்வதைக்) கேட்பாயாக:தென்திசை மறலிபால் - தெற்குத்
திக்குப்பாலகனாகிய யமனிடத்தில், இ தீய வஞ்சகர் - கொடிய
வஞ்சனையையுடையஇந்த அசுரர்கள், முன் பெற்ற - முற்காலத்தில் பெற்ற,
வன் திறல் படைஉம் - மிக்க