லாம். மடம்-அழகும், பேதைமை யென்னும் பெண்மைக்குணமும் ஆகவுமாம். (278) 103.-அசுரமாதரின்புலம்பலால் அருச்சுனன் சினந்தீர்ந்து இரக்கங்கொள்ளுதல். இவ்வாறவுணர்மடமாத ரிரங்கியேங்க மைவாள்விழியின்வழியஞ்சன வாரிபாயத் தெவ்வாறியபின்னருந்தீர்ந்தில தீர்ந்தவன்றே கைவார்சிலையான்கடுங்கோபமுங்கண்சிவப்பும். |
(இ - ள்.)தெவ் ஆறிய பின்னர்உம் - பகைவர்களாகிய அசுரர்கள் ஒழிந்தபின்பும், தீர்ந்தில - நீங்காதவையாகிய, கை வார் சிலையானகடு கோபம்உம் - கையில் நீண்ட வில்லையுடையஅருச்சுனனது பெருங்கோபமும், கண்சிவப்புஉம் - (அதனாலாகிய)கண்ணின் செம்மையும்,- இ ஆறு அவுணர் மடம் மாதர் இரங்கி ஏங்க - இவ்விதமாக இளைய அசுரமகளிர் துக்கித்து அழவும், மை வாள் விழியின் வழி - (அவர்களது) மையிட்ட வாளாயுதம் போன்ற கண்களின்வழியே, அஞ்சனம் வாரி - மையைக் கரைத்துவருகின்ற கண்ணீர், பாய - பெருகவும், (கண்டதனால்), அன்றே தீர்ந்த-அப்பொழுதே தணிந்தன;(எ - று.) இதனால்,அருச்சுனனுக்குத் தேவர்களின் வேண்டுகோளாற் பகைவர்கள்பக்கல் உண்டாயிருந்த ஆறாக்கோபத்தையும்,இயல்பாயுள்ள பேரருளுடைமையையும் வெளியிட்டார். விழிக்கு வாளுவமை - கூர்மையும் ஆடவரை வருத்தலும் பற்றி. தெவ்-பகைமையுணர்த்தும் உரிச்சொல்; பகைவர்க்குப் பண்பாகுபெயர். விழியின் வழி - கண்களினின்று ஒழுகுகின்ற என்றுமாம். (279) 104.-தேரைநாகரூர்க்கு நடத்துக என்று அருச்சுனன் கூறல். அன்னார்நகரத்தழகுந்தொல்லரணுநோக்கி மின்னாரும்வேலன்விறன்மாதலிதன்னைமீண்டு நன்னாகரூரிற்றடந்தேரைநடாத்துகென்னச் சொன்னானவனுந்துனைதேர்நனிதூண்டுமெல்லை. |
இதுவும், மேற்கவியும்- குளகம். (இ - ள்.)மின் ஆரும் வேலன் - ஒளிநிரம்பிய வேலாயுதத்தையுடைய அருச்சுனன்,-அன்னார்நகரத்து அழகுஉம் - அவ்வசுரர்களது தோயமாபுரத்தின் அழகையும், தொல் அரண்உம் - பழமையான (மதிலும் கடலகழியுமாகிய) அரண்களையும்,நோக்கி - பார்த்து, (பின்பு), விறல் மாதலி தன்னை- ஜயத்தையுடைய தேர்ப்பாகனைநோக்கி, நல் நாகர் ஊரில்-நல்ல தேவர்களது நகரத்திலே, தட தேரை - பெரிய இரதத்தை, மீண்டு நடாத்துக - திரும்பச் செலுத்துவாயாக, என்ன - என்று, சொன்னான்-;அவன்உம் - |