(இ-ள்.) அந்தஓதை எதிர் - அவ்வோசையுண்டான இடத்துக்கு எதிர்நோக்கி, ஓடுவார்உம் - ஓடுபவர்களும், உடன்று - பகைத்து, உறுக்கி - கோபித்து, நாடுவார்உம் - (அவ்வோசையுண்டாதற்குக்காரணத்தை) ஆராய்பவர்களும், நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா- நம்மவர்களது பராக்கிரமம் மிகநன்றாயிருந்ததுஎன்று, நகைத்து ஆடுவார்உம் - (தம்மில்) சிரித்துப் பேசுபவர்களும், அமரர் வாழ்வு பாழ்படுத்தும் - தேவர்களது வாழ்க்கையைப் பாழாக்கிவருகிற, ஆயுதம் - ஆயுதங்களை,தேடுவார்உம் - தேடி யெடுப்பவர்களும், எண் இறந்த தேர்கள் ஏறுவார்உம் - அளவில்லாத தேர்களில் ஏறுபவர்களுமாய்,-(எ-று.)-'உந்திமுந்தினார்'என, மேலிற்கவியில் முடியும். ஆய் என்னும்வினையெச்சம்,வருவிக்கப்பட்டது. நம்மவர் பராக்கிரமம் பிறர் அஞ்சாது வந்து எதிர்க்கும்படியாயிற்றேயென்று, இகழ்ச்சி தோன்ற 'நன்றுநன்று'என்றார்;பிறகுறிப்பு. ஆடுதல் - வார்த்தையாடுதல். 'உறுக்கிமேல்'என்று பிரதிபேதம். 117. | கூளிகோடியுய்ப்பகுஞ்ச ரங்கள்கோடியுய்ப்பபேர் ஆளிகோடியுய்ப்பவாயு கதிகொடந்தரத்தின்மேல் வாளிபோதும்வாசிகோடி கோடியுய்ப்பவாவுதேர் ஓளியாகவானினெல்லைமறையவுந்திமுந்தினார். |
(இ-ள்.) கூளிகோடி உய்ப்ப - பலபெருங்கழுகுகள் இழுத்துப் பறந்து செல்வனவும், குஞ்சரங்கள் கோடி உய்ப்ப - பலயானைகள்இழுத்துச் செல்வனவும், பேர் ஆளி கோடி உய்ப்ப - பெரிய சிங்கங்கள் பல இழுப்பனவும், வாயு கதி கொடு - காற்றுச்செல்லும் வேகத்தைப் பெற்று, அந்தரத்தின்மேல் - ஆகாயத்திலே, வாளி போதும் - அம்புபோல நேர் செல்லுகின்ற, வாசி கோடி கோடி - மிகப் பலவாகிய குதிரைகள், உய்ப்ப - இழுப்பனவுமாகிய, வாவு தேர் - தாவிச் செல்லுகின்ற தேர்களை,ஓளி ஆக - ஒழுங்காக, வானின் எல்லைமறைய - ஆகாயத்தின் எல்லைமறையும்படி, உந்தி-செலுத்தி, முந்தினார்- முற்பட்டு வந்தார்கள்;(எ-று.) அந்த அசுரர்களின் தேர்கள் கூளி முதலியவைகளால் ஈர்க்கப்பட்டுச் சென்றன என்க. கூளி பூதமுமாம். குஞ்சரம் - மத்தகங்களுக்குக் கீழிருக்கின்ற குழிகளுள்ள தென்றும், காட்டுப் புதர்களிற் சஞ்சரிப்பதென்றும் காரணப்பொருள்படும். வாளி போதல்-வட்டமா யோடுதலுமாம். வாசி - வாஜி; வடசொல். ஆயதேர் என்று பிரதிபேதம். (293) 118.-அவ்வசுரர்கள்மனத்தில் அருச்சுனனைபற்றி நிகழும் எண்ணம். அந்தகன்பொரற்குநம்மை வல்லனல்லனபயமுன் தந்தவிந்திரன்றனக்கு மொக்குமன்னதன்மைதான் கந்தனென்னிலாறிரண்டு கண்கள்கைகளில்லைமேல் எந்தவீரனம்மொடின்றெ திர்க்குமிந்தவீரனே. |
|