பக்கம் எண் :

202பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)தவரினுக்கு - வில்வித்தையில், இராகவன் கொல் என -
ஸ்ரீராமபிரானோஎன்று சொல்லும்படி, வரும் - அவதரித்த, தனஞ்சயன் -
அருச்சுனன்,-அவர்விடுத்த - அவ்வசுரர்கள் (தன்மேல்) எறிந்த, படைகள்
யாஉம் - ஆயுதங்களனைத்தும்,அழிய - அழியும்படி, வானிடை -
ஆகாயத்திலே, கணை- அம்புகளை,கவர் தொடுத்து - ஒன்று பலவாம்படி
விடுத்து, விலகி - (அவர்களின் ஆயுதங்களுக்குத் தான் இலக்காகாமல்)
நீங்கி, மீள - பின்பு, அவர்கள் காயம் எங்கண்உம்-அவர்களுடம்பு
முழுவதிலும், துவர் நிறத்த குருதி - சிவந்த நிறத்தையுடைய இரத்தம்,
சோர்தர-வழியும்படி, சரம் துரத்தினான்-அம்புகளைஎய்தான்;(எ-று.)

    கவர்தொடுத்தலாவது - ஒன்றிலிருந்து பலதோன்ற விடுதல்.  துவர்
நிறத்த - பவழம்போன்ற நிறத்தையுடைய என்றுமாம்.  கணைக்கவர்-
இரட்டையம்பு என்று உரைப்பாருமுளர்.  தவர் - வில்.  இராகவன் -
ரகுமகாராசனது குலத்தில் அவதரித்தவனென்று பொருள்.        (302)

127.-அருச்சுனனம்புபடவேஅவுணர் ஆகாயத்தி
லெழுந்து பூமி நீர்இவற்றில் தம் பட்டணத்தோடு
மறைந்துமாயைபுரிதல்.

பார்த்தனெய்தவாளிமெய் படப்படப்பதைத்துமீது
ஆர்த்தெழுந்துநகரினோடுமந்தரத்தினெல்லைபோய்
வார்த்தரங்கவேலையூடுமண்ணினூடுமறையவத்
தூர்த்தர்செய்தவஞ்சமாயை சொல்லலாகுமளவதோ.

     (இ-ள்.)பார்த்தன் எய்த வாளி - அருச்சுனன் எய்த அம்புகள், மெய்
பட பட - (தம்) உடம்பில் மிகுதியாகப் படுவதனால்,அ தூர்த்தர் -
வஞ்சகர்களாகிய அவ்வசுரர்கள், பதைத்து - வருந்தி, ஆர்த்து ஆரவாரித்து,
மீது எழுந்து - மேலே கிளம்பி, நகரினோடுஉம்- (தங்கள்)
பட்டணத்துடனே, அந்தரத்தின் எல்லைபோய் - ஆகாயத்தினிடத்தே
சென்று, வார் தரங்கம் வேலையூடுஉம் - நீரலைகளையுடைய
கடலினிடத்தும், மண்ணினூடுஉம் - பூமியிலும், மறைய - மறைவாக (நின்று),
செய்த-,வஞ்சம் மாயை-வஞ்சனையுள்ளமாயையானது, சொல்லல் ஆகும்
அளவதுஓ - சொல்லுதற்குக்கூடிய அளவையுடையதோ?  [அன்றென்றபடி].

     பார்த்தன் -பிரதையின் மகன் என்றுபொருள்: பிரதை - குந்தி;இது
- அருச்சுனனுக்குக் காரணக்குறி.                             (303)

128.-அவுணரின்இந்திரஜாலம்.

அண்ணறேரின்முன்னதாகு மளவிறந்ததேரொடும்
விண்ணின்மீதுதிசையளக்கும் வெற்பின்மீதுபொலியுமெக்
கண்ணுமாகுமக்கணத்தின் மீளவுங்கரந்திடும்
எண்ணலாவதன்றதன் றியற்றுமிந்த்ரசாலமே.