(இ-ள்.) (அவ்வசுரர்களோடு கூடிய இரணியபுரமானது),-அண்ணல் தேரின் முன்னது ஆகும் - (ஒருகால்) அருச்சுனனது தேருக்கு எதிரில் உள்ளதாய்க் காணப்படும்;(உடனே), அளவு இறந்த தேரொடுஉம் - கணக்கில்லாத தேர்களுடனே, விண்ணின் மீது - ஆகாயத்திலே, திசை அளக்கும் - (முழுவதும் பரவி) எல்லாத்திக்குக்களையும்அளவிடும்; வெற்பின்மீது பொலியும் - (மற்றொருகால்)ஒருமலையின்மேலேவிளங்கும்; எ கண்உம் ஆகும் - (வேறொருகால்)எவ்விடத்துங் காணப்படும்;அ கணத்தில் - அந்த க்ஷணத்தில்தானே, மீளஉம் கரந்திடும்-திரும்பவும் மறைந்து விடும்;அது அன்று இயற்றும் - அன்றைத்தினத்தில் அவ்விரணியபுரம் செய்த, இந்த்ர சாலம் - மகாமாயையானது, எண்ணல் ஆவது அன்று - நினைப்பதற்குங்கூடியதன்மையுடையதன்று; எண்ணலாவதன்றுஎன்றதனால்,சொல்லலாவதுஞ் செய்யலாவது மன்றென்பது தானே பெறப்படும். இந்திரசாலமாவது - உள்ளதை இல்லாததாகவும் இல்லாததை உள்ளதாகவும்ஒன்றை மற்றொன்றாகவும் அற்புதங் காட்டுவதொரு மாயவித்தை: ஆன்மாவை மயங்கச்செய்வதென்பது, இத்தொடர்க்குப் பொருள். அது - அப்புரத்திலுள்ளார்க்கு, இடவாகுபெயர். (304) 129.-தன்ஒற்றைவில்லைக்கொண்டுஅருச்சுனன் எங்குஞ் சரமாரிபொழிதல். அந்தவஞ்சர்புரியுமாயை வகையறிந்தருச்சுனன் சிந்தைகன்றிவிழிசிவந்து தெய்வவாகைவில்லையும் மைந்துடன்குனித்துவாளி வாயுவேகமுடன்விடுத்து எந்தவெந்தவுலகுமப்பு மாரியாவியற்றினான். |
(இ-ள்.) அந்தவஞ்சர் புரியும் - வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள் செய்கின்ற, மாயை வகை - மாயையின் விதத்தை, அறிந்து-,அருச்சுனன்-, சிந்தை கன்றி - மனங் கொதித்து, விழி சிவந்து - கண்கள் செம்மை நிறமடைந்து, தெய்வம் வாகை வில்லைஉம்- தெய்வத்தன்மையையும் வெற்றிமாலையையுமுடையகாண்டீவத்தையும், மைந்துடன் குனித்து - பலத்தோடு வளைத்து,வாளி - அம்புகளை,வாயு வேகமுடன் - காற்றை யொத்த வேகத்துடனே, விடுத்து - தொடுத்து, எந்த எந்த உலகுஉம்- (அந்நகரஞ் செல்லுகின்ற) எல்லா இடங்களையும்,அப்பு மாரி ஆ இயற்றினான்- பாணவர்ஷமயமாகச் செய்தான்;(எ-று.) அப்பு மாரி -அம்புகளின் மழை;வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று. மாரியால் என்றும் பாடம். (305) 130.-அருச்சுனன்திறனைஅவுணர்மதித்துக் கூறல். தனிதமேகமன்னதேரு மொன்றுதாவில்குன்றுபோல் குனிதருங்கடுப்பின்மிக்க கொடியவில்லுமொன்றுமேல் கனிவுறுஞ்சரக்குழாம் விசும்பினெல்லைகாட்டுமோர் மனிதன்வின்மைநன்றுநன் றெனாமதித்துவஞ்சரே. |
|