பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்209

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)மாருதம் - காற்றானது,விசையுடன்-வேகத்துடனே, வட
அனல் கொளுவி - வடவாமுகாக்கினியைத் துணையாகக்கொண்டு, கார்
தொறுஉம் - மேகங்களிலெல்லாம், நிரை நிரை - வரிசை வரிசையாக,
கடிகுவது அதுபோல் - அழிவையுண்டாக்குகிற அத்தன்மைபோல,
தேர்தொறுஉம் அமர் புரி அவுணர்கள் தேகத்து - தேர்களிலெல்லாமிருந்து
போர்செய்கின்ற அசுரர்களது உடம்புதோறும், ஓர் ஒரு கணை-ஒவ்வொரு
அம்பு, ஒரு நொடியினில்-ஒரு நொடிப்பொழுதிலே, உற-(அந்த
அஸ்திரத்தினதுதிவ்விய சக்தியால்) பொருந்த,-(எ-று.)-சிதறி,பொதுள,
கஞலின என்க.

     படபாநலம்என்னும் வடமொழி, தமிழில் 'வடவனல்'எனச் சிதைந்து
வழங்கிற்று;அது, கடலினிடையே பெண்குதிரையொன்றின் முகத்திலுள்ளதும்,
மழை முதலியவற்றால்வருகிறநீரினாற்கடல் பொங்காதபடி அந்நீரை
உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்கு நின்று எழுந்து உலகங்களை
யொழிப்பதுமாகிய தீ;படபா-பெண்குதிரை, அநலம் - நெருப்பு.  வடவனல்
என்பதற்கு - வடக்கிலுள்ள அக்கினி யென்று உரைப்பாருமுளர்.  மிக
விரைவிலழித்தற்கு, காற்று நெருப்போடு சேர்தலைஉவமை கூறினார்.
கொளுவுதல்-கூட்டிக்கொள்ளுதல்.  கடிகுவது, கு-சாரியை.          (315)

140.மகபதியரிசிறை வரைநிகரெனவே
திகைதொறுமவுணர்கள் சிரநனிசிதறிப்
புகையொடுதெறுகன லகல்வெளிபொதுளக்
ககபடலமுமுறை கஞலினகளமே.

     (இ-ள்.)(அவ்வம்புகளினால்),மகபதி அரி சிறை வரை நிகர் என-
இந்திரனால்அறுக்கப்பட்ட இறகுகளையுடையமலைகள்ஒப்பென்னும்படி,
திகைதொறுஉம் - எல்லாத்திக்குக்களிலும், அவுணர்கள் சிரம் - அசுரர்களது
தலைகள்,நனி சிதறி-மிகவுஞ் சிந்தி, தெறு கனல் - (அகப்பட்டவற்றை)
அழிக்கின்ற நெருப்பு, புகையொடு - புகையுடனே, அகல் வெளி - பரந்த
ஆகாயவெளியிலே, பொதுள - நிறையாநிற்க,-ககபடலம்உம் -
(கழுகுமுதலிய புலாலுண்ணும்) பறவைகளின் கூட்டமும், களம் -
போர்க்களத்தில், முறை-ஒன்றன்பின் ஒன்றாக,கஞலின-நெருங்கின;(எ-று.)

     க கம்என்பதற்கு - ஆகாயத்திற் செல்லுவதென்று பொருள்;கம்-
ஆகாசம். ககபடலம் - பலவினீட்டத்தற்கிழமைப்பொருளில் வந்த ஆறாம்
வேற்றுமைத்தொகை;வடமொழித்தொடர்.                   (316)

141.-படுகளச்சிறப்பு.

ஆடினவறுகுறை யலகைகளுடனின்று
ஓடினதிசைதொறு முகுகுருதியினீர்
நீடினபிணமலைநிரைநிரைநெறிபோய்த்
தேடினகதிர்களு மிசைவழிசெலவே.