பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்229

கணத்தின்-அந்தப்போதில் தானே, காமியம் என்று உரை பெறு சீர்
வனத்தை நீங்கிஏகி-காமியமென்று சொல்லப்படுகிற சிறந்த வனத்தை
விட்டுப்போய், கடவுள் முனி தன்னோடுஉம்-தெய்வத்தன்மையையுடைய
அந்த உரோமச முனிவனுடனே, நாமம்-பிரசித்தமான, மதுகரதீர்த்தம் முதல்
ஆ உள்ள - மதுகர தீர்த்தம் முதலாகவுள்ள, நல் தீர்த்தம் எவற்றின்உம்-
சிறந்த தீர்த்தங்களெல்லாவற்றிலும், போய்-சென்றடைந்து, நானம் ஆடி-
ஸ்நானம் செய்து, தாமம் மதி தவழ் சிகரத்து-ஒளி பொருந்திய சந்திரன்
ஊர்ந்து செல்லுகின்ற சிகரத்தையுடைய, இந்த்ரகீலசயிலத்தின்-
இந்திரகீலமலையின்,சுனைகெழு - சுனைபொருந்திய,தண் சாரல்-குளிர்ந்த
சாரலை,சார்ந்தார்-;(எ-று.)

     கடவுண்முனிதன்னோடும்ஏகி என்றதனால்,அம் முனிவன் இன்னது
இது என்று காட்டிச் செல்லப் பாண்டவர் சென்றனரென்பது,
பெறப்படுமென்பர்.  லோமச முனிவர் இந்திரன் கூறிய செய்தியைச்
சொன்னபின் யுதிஷ்டிராதியரை யழைத்துக் கொண்டு தீர்த்தயாத்திரை
செய்து வருமாறு அருச்சுனன் கூறியதைத் தெரிவிக்க, லோமசர்
முதலியவரோடு யுதிஷ்டிரர் தீர்த்தயாத்திரைசெய்தா ரென்று வியாசபாரதம்
கூறும்.  இந்திரநீலசயிலத்தின் என்று பிரதிபேதம்.             (344)

8.அக்கிரியின்புதுமையெலாமடைவேநோக்கி
               யங்குள்ளவருவிநறும்புனலுமாடித்,
தக்கபுகழ்விசயனருந்தவம்புரிந்த சாரலிதுவெ
                      ன்றுதவமுனிவன்சாற்ற,
மிக்ககளியுவகைதிகழ்நெஞ்சராகிவிசயனைக்
               கண்டனர்போலவிரும்பிக்கண்டு,
தொக்கமுனிகணத்தொடும்போய்த்தசாங்கனென்னுந்தொல்லை
              முனிதபோவனத்தின்சூழல்சார்ந்தார்.

     (இ-ள்.) அகிரியின் - இந்திரகீல பருவதத்தின், புதுமை எலாம் -
அதிசயங்களையெல்லாம், அடைவுஏ - முறையாக, நோக்கி - பார்த்து,
அங்கு உள்ள - அம்மலையிலுள்ள,அருவி ஸ்நானஞ்செய்து, 'தக்கபுகழ்
விசயன் - தகுதியான புகழடைந்த அருச்சுனன், அருந்தவம் புரிந்த-,சாரல்
- தாழ்வரை, இது-,'என்று-,தவம் முனிவன் - தவத்தையுடைய அந்த
உரோமசமுனிவன், சாற்ற-சொல்ல,-மிக்ககளி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி-
மிக்க பெருமகிழ்ச்சி பொருந்திய மனத்தை உடையவராய், (பாண்டவர்,
விசயனைகண்டனர் போல-அருச்சுனனையேநேரிற் கண்டனர் போல,
விரும்பி கண்டு-(அவ்விடத்தை) அன்புகொண்டுபார்த்து, தொக்க -
(தம்முடன்) கூடியிருந்த, முனிகணத்தொடுஉம்-முனிவர் கூட்டத்துடனே,
போய்-,தசாங்கன் என்னும் தொல்லைமுனி-தசாங்கனென்று
பேர்படைத்தபழமையான முனிவனுடைய, தபோவனத்தின் - தவஞ்செய்யும்
வனத்தின், சூழல் - பிரதேசத்தை, சார்ந்தார்-;(எ-று).

     அருச்சுனன்தவஞ்செய்த இடத்தை அவனைப்போலப்பாண்டவர்
கண்டன ரென்றதனால்,பாண்டவர்க்கு அருச்சுனனிட