பக்கம் எண் :

230பாரதம்ஆரணிய பருவம்

மிருந்த அன்புமிகுதிவிளங்கும்.  புதுமை - பண்பாகுபெயர்.  களியுவகை -
ஒருபொருட்பன்மொழி.                                     (345)

9.அங்குள்ளதபோதனர்தம்பாதம்போற்றியவருரைக்குமாசியும்
                            பெற்றப்பாலேகி,
எங்குள்ளகடவுணெடும்புனலும்யாறு மெப்புனலுந்
                          தப்பாமலினிதினாடி,
வங்கமெறிகடல்கடைந்துவானோர்க்கெல்லாமரு
              ந்துவிருந்தருளியமந்தரமுங்காட்டிக்,
கங்கைநதிகுதிபாயுஞ்சிகரச்சா ரற்
          காந்தர்ப்பமெனும் வரையுங்காட்டினானே.

     (இ-ள்.)அங்குஉள்ள - அந்த இந்திரகீலமலையிலிருக்கின்ற,
தபோதனர்தம் - முனிவர்களுடைய, பாதம் - பாதங்களை,போற்றி -
துதித்து, அவர் உரைக்கும் - அம்முனிவர் அருள் கொண்டு கூறும்,
ஆசிஉம் - வாழ்த்துக்களையும்,பெற்று-,அப்பால் ஏகி-அப்புறம் போய்,
எங்கு உள்ள-சென்ற பலவிடங்களிலுமுள்ள, கடவுள் நெடும் புனல்உம்-
தெய்வீகம் பொருந்திய சிறப்புப் பெற்ற அருவித்தீர்த்தங்களிலும், யாறுஉம்-
நதிகளிலும், எப்புனல்உம் - (மடுமுதலாகவுள்ள) எல்லாத்தீர்த்தங்களிலும்,
தப்பாமல்-ஒன்றுவிடாமல், (பாண்டவர்), இனிதின் ஆடி - இனிது ஸ்நானஞ்
செய்து நிற்க,-(உரோமசமுனிவன்), வங்கம் எறி கடல்
கடைந்துவானோர்க்குஎல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரம்உம்
காட்டி - அலைவீசுகிறகடலைக்கடைந்து தேவர்கள் யாவர்க்கும்
அமிருதத்தை விருந்துணவாகத்தந்த மந்தரமாலையைக்காட்டி, (பிறகு
அருச்சுனன் சுவர்க்கலோகத்திருந்துஇறங்கப்போகின்ற), கங்கை நதி குதி
பாயும் சிகரம் சாரல் காந்தர்ப்பம் எனும் வரைஉம்-கங்காநதி குதித்துப்
பாயப்பெற்ற சிகரத்தையும் தாழ்வரையையுங்கொண்ட காந்தர்ப்பமென்கிற
மலையையும்,காட்டினான்-;(எ-று.)

     மேலேமந்தரமுங்காட்டி வரையுங்காட்டினானென்றுவருவதனால்,
இந்தப் பாண்டவர்கள் நீராடியதும் 'இதுஇந்தத் தீர்த்தம், 
இது இந்தத்
தீர்த்தம்'என்று அந்தக் கடவுள் முனிவன் காட்டக்கண்ட
தீர்த்தங்களிலேயே யென்பது பெறப்படும்.  காட்டினவன் உரோமசனே
யென்பது மேற்கவியால் விளங்கும்.  ஆடி=ஆட;பிறகருத்தாவின்
வினையைக்கொண்டு முடிதற்கு உரிய செயவென்னும் வாய்பாட்டு
வினையெச்சமாகத்திரிக்க.  கந்தமாதன வரையும் என்று பாடமிருப்பின்
நலம்.                                                (346)    

10.அந்தவுயர்கிரியினெடுஞ்சாரறோறுமருந்தவஞ்செய்முனி
                          வரரையடைவேகாட்டி,
இந்தவனந்தனக்கெமையாளுடையான் குன்ற மீரைம்பதி
                யோசனையென்றெடுத்துக்காட்டிக்,
கந்தனெனவெக் கலையும்வல்லஞானக்
             கடவுண்முனிவிசாலயனாலயமுங்காட்டி,
உந்து நெறிச்சொங்கோலாயிதனிலோராண்
          டிருத்தியெனவுரோமசனுமுரை த்திட்டானே.

     (இ-ள்.) அந்தஉயர் கிரியின்-அந்த ஓங்கிய காந்தர்ப்பமலையின்,
நெடுஞ் சாரல் தோறுஉம்-நீண்ட தாழ்வரைதோறும், அருந்தவஞ் செய் -
அருமையான தவத்தைச் செய்கின்ற, முனிவரரை-