பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்231

இருடிச் சிரேட்டரை,அடைவுஏ காட்டி - முறையே இன்னாரின்னாரென்று
தெரிவித்து, இந்த வனம் தனக்கு - இந்தத் தபோவனத்துக்கு, எமை
ஆள்உடையவன் குன்றம்-எம்மையடிமையாகவுடைய சிவபெருமானுடைய
கைலாசமலை,ஈர் ஐம்பது யோசனைஎன்று எடுத்துக் காட்டி -
நூறுயோசனைதூரத்தி லுள்ளதாகும் என்று எடுத்துச் சொல்லி,-கந்தன்என
கலைஉம்வல்ல ஞானம் கடவுள் முனி - முருகக்கடவுளென்று சொல்லும்படி
எல்லா வித்தைகளிலும் வல்லவனானபேரறிவுபடைத்த தெய்வவிருடியாகிய,
விசாலயன் - விசாலயனென்ற முனிவனின், ஆலயம்உம் -
இருப்பிடத்தையும், காட்டி-,உரோமசன்உம்-,நெறி உந்து - நன்னெறியிற்
செலுத்துகின்ற, செங்கோலாய் - செங்கோலையுடயவனே! இதனில் - இந்தக்
காந்தர்ப்பமலையிலே,ஓர் ஆண்டு இருத்தி என-ஒரு வருஷகாலம்
தங்கியிருப்பாயென்று, உரைத்திட்டான்-சொன்னான்;(எ-று.)  (347)

11.-பாண்டவர்காந்தர்ப்பகிரியின் வனத்திலிருக்கையில்
பொன்மலரொன்றுவீழ்ந்ததைக் கையிற்கொண்டு
திரௌபதிசிந்தித்தல்.

அம்முனிவன்மொழிப்படியேவரம்பில்கேள்வி
                 யறன்மகனுந்தம்பியருமரிவையோடும்,
எம்முகமுந்தம்முகமாவிலையுங்காயுமினியகனி யுடன
                            ருந்தியிருக்குநாளில்,
மைம்முகில்வாகனன்கனகமுடிமேலம் பொன் வனசமல
                    ரொன்றுதழன்மயின்முன்வீழச்,
செம்மலரைச்செங் கண்மலர்தன்னானோக்கிச்
            செய்யமலர்க்கரத்தேந்திச்சிந்தித்தாளே.

     (இ-ள்.) அமுனிவன் மொழி படியே - அந்த உரோமசமுனிவனது
வார்த்தையின்படியே, வரம்பு இல் கேள்வி அறன்மகன்உம் - அளவில்லாத
நூற்கேள்விகளையுடையதருமபுத்திரனும், தம்பியர்உம் - வீமன்
முதலியோரும், அரிவையயோடுஉம் - திரௌபதியுடனே, எ முகம்உம் -
அக்காட்டினிடம் முழுவதும், தம் முகம் ஆ - தமது சொந்தவிடத்தை
யொத்துத் தம் வயத்திலிருக்க, இலைஉம்காய்உம் இனிய கனியுடன் அருந்தி
- இலைகளையும்காய்களையும்சுவையினிய பழங்களையும்உண்டு,
இருக்கும் நாளில்-(அவ்வனத்தில்) வாழ்ந்திருக்கும் நாட்களிலொருநாள்,-மை
முகில் வாகனன் கனகம் முடிமேல் - கருநிறமுடைய மேகத்தை
வாகனமாகவுடைய இந்திரனது பொன்னாலாகியகிரீடத்தையணிந்த சிரசின்
மேலிருத்தற்கு உரிய, அம்பொன் வனசம் மலர் ஒன்று - அழகிய
பொன்மயமானதொரு தாமரைப்பூ, தழல் மயில் முன் -
நெருப்பினின்றவதரித்த மயில்போலுஞ் சாயலையுடையதிரௌபதியினெதிரில்,
வீழ - வீழ்ந்திட,-(அவள்)செம் மலரை - சிவந்த அந்தப் பூவை, செம்
கண் மலர்தன்னால்-(தனது)செந்தாமரைமலர்போன்ற கண்களினால்,நோக்கி
- பார்த்து, செய்ய மலர் கரத்து ஏந்தி - சிவந்த தாமரைமலர்போன்ற (தன்)
கையிலே யெடுத்துக்கொண்டு, சிந்தித்தாள் - (அதைக் குறித்து வியப்புடன்
பின்வருமாறு) என்ணுபவளானாள்;(எ-று.)