பக்கம் எண் :

238பாரதம்ஆரணிய பருவம்

யும், வேருடன்-,நேர் ஆக்கி-அழித்து,-விலங்கினொடு-மிருகங்களினுடனே,
புள் இனம்உம்-பறவைக் கூட்டங்களும், உடைய-அழியும்படி, தாக்கி-மோதி,
மெய் நடுங்கி உள்ளம் வெம்பி தடுமாறி கலங்கி விழ கனம் அதிர்வ போல
ஆர்த்து-உடல்நடுங்கி உள்ளம் கரிந்து தடுமாற்றமடைந்து கலங்கி விழும்படி
மேகம் இடிப்பது போலப் பேராரவாரஞ்செய்துகொண்டு, காஞ்சனம் பேர்
எழில் வனம்உம் - காஞ்சனமென்று பேரையுடைய பெரிய அழகிய
வனத்தையும், கடந்திட்டான்-;(எ-று.)

     இந்தவீமசேனன் செல்லும் விசையினால்,நிலங்குலுங்குதல் முதலியன
நிகழலாயின என்க.  அடையத் தாக்கி என்று பிரதிபேதம்.         (354)

18.-வீமசேனன்கதலிவனத்தைக் காணுதல்.

அவ்வனத்தையிகந்தனந்தகாதமேகி யங்கிடைவிட்டுத்தரத்
                                 தினப்பாலேகி,
மெய்வனப்புமடல்வலியுமிகுத்தவாகை வீமனெனும்
                   பேர்திசையின் விளக்கும்வீரன்,
மைவனப்பினுடன்படியுஞ்சினைக்கைவாச
           மலர்ப்பொழிலினொருமருங்கேமத்தமாவின்,
கைவனப்புந்தழைசெவியுமருப்புஞ்சேரக்கவினளிக்
                     குங்குலைக்கதலிக்காடுகண்டான்.

     (இ-ள்.) மெய்வனப்புஉம் - உடலழகும், அடல் வலிஉம்-(பகைவரை)
அழிக்க வல்ல உடல் வலிமையும், மிகுத்த-மிக்குள்ள, வாகை-
வெற்றியையுடைய, வீமன் எனும் பேர் திசையின் விளக்கும்வீரன் -
வீமனென்கிற (தன்) பெயரைத் திக்குகளில் விளங்கச் செய்பவனாகியஅந்த
வீரன்,-அவனத்தை இகந்து - அந்தக் காஞ்சன வனத்தைவிட்டு, அனந்தம்
காதம் ஏகி - பல காததூரஞ்சென்று, அங்கு இடைவிட்டு-
அவ்விடத்தைவிட்டு, உத்தரத்தின்-வடதிசையாக, அப்பால் ஏகி-
அப்புறஞ்சென்று,-மை-மேகம்,வனப்பினுடன்-அழகிய நிறத்தோடு, படியும்-
தங்கப்பெற்ற, சினை-கிளைகளின்,கை-பக்கங்களிலே, வாசம் மலர் -
நறுமணமுள்ள மலர்களைக்கொண்ட,பொழிலின் - சோலையின்,
ஒருமருங்கே - ஒருபக்கத்திலே, மத்தம்மாவின்- மதம் பிடிக்குந்
தன்மையுள்ள யானையின்,கை வனப்புஉம்-கையினழகும், தழை செவிஉம் -
தழைந்த காதுகளும், மருப்புஉம்-தந்தங்களும், சேர-சேர்தலால், கவின் -
அழகை, அளிக்கும் - தருகின்ற, குலைகதலி காடு - குலைபொருந்திய
கதலீவனத்தை, கண்டான்-;(எ-று.)

    பின்னிரண்டடிகள் - கதலீவனத்தின் தன்மையைக் கூறுவன.
கதலீவனமென்பதனை,கதலிக்காடு என்றார். தூரத்திலிருந்து காணும்போது
தழைந்தஇலைகள்யானைக்காதுகளையும்,அடித்தண்டு நிலம்படியும்
யானைக்கைகளையும்,குலைகள்யானைமருப்புக்களையும் போலுதலால்,
கதலிவனம் 'மத்தமாவின்கைவனப்பும்தழைசெவியும் மருப்புஞ்சேரக்
கவினளிக்குங் குலைக்கதலிக்காடு'எனப்பட்டது.  பலபொழில்கள்சுற்றியிருக்க
அவற்றினிடையே இந்தக் கதலிக்காடு இருப்பதுஎன்பதனை,'பொழிலினொரு
மருங்கே கதலிக்காடு'என்பது, விளக்கும்.                       (355)