பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்239

19.-வீமன்கதலீவனத்துக் காவலரை உயிரொழித்துக்
கர்ச்சித்தல்.

அக்கதலிவனந்தனக்குக்காவலாய வடலரக்கரனேகருடனடு
                                  போர்செய்து,
மிக்கதலங்குருதியினால்வெள்ளமாக்கிவெகுண்டவர்த
                   மாவியையும் விண்ணி லேற்றித்,
திக்கதலமுதலாமெவ்வுலகுமேங்கச்சிங்கநாதமுஞ்செய்தான்
                                  செய்த காலை,
உக்கதலைமணியுரகராசற்கென்றாலும்பர்படுந்துயர
                          மெம்மாலுரைக்கலாமோ.

     (இ-ள்.) அகதலி வனம் தனக்கு - அந்தக்கதலிவனத்துக்கு, காவல்
ஆய - பாதுகாவலைச்செய்துகொண்டிருந்த,அடல் அரக்கர் அனேகருடன்
- வலிமை பொருந்திய ராட்சசர்பலரோடும், அடு போர் செய்து -
(அவருயிரை) அழிக்கவல்ல போரைச் செய்து,-மிக்கதலம் - பூமியின்
பெரும்பகுதியை, குருதியினால்வெள்ளம் ஆக்கி -
இரத்தவெள்ளம்பரவும்படிசெய்து, வெகுண்டவர்தம் ஆவியைஉம் -
(தன்னோடு)கோபித்துப்பொருத அரக்கரின்உயிர்களையும்,விண்ணில் ஏற்றி
- வீரசுவர்க்கத்தை யடையுமாறுசெய்து, திக்கு - கீழைத்திக்கிலிருப்பதாகிய,
அதலம்முதல்ஆம்-அதலம்முதலான, எ உலகுஉம்-எந்த உலகமும், ஏங்க-
ஏக்கமடையும்படி, சிங்கநாதமும் செய்தான்-;செய்த காலை- அப்படிச்
சிங்கநாதஞ் செய்தபோது, (அந்தஒலியின் அதிர்ச்சியினால்),உரகராசற்கு-
ஆதிசேஷனுக்கு, தலைமணி - சிரசிலிருக்கும் மாணிக்கம், உக்க-சிந்தின;
என்றால்-இவ்வாறுநிகழ்ந்ததானால்,-உம்பர்படும் துயரம்-
மேலுலகத்திலுள்ளவரான தேவர்கள் படுகின்ற துயரத்தை, எம்மால்-,
உரைக்கல் ஆம்ஓ-சொல்ல முடியுமோ?  (எ-று.)

    எல்லாப்பாரத்தையுங்கீழிருந்துசுமக்கும் ஆதிசேஷனது முடிமணியே
வீமன்செய்த சிங்கநாதத்தால் உக்கதென்றால்,எப்போதும் சுகத்தையே
யனுபவித்துக்கொண்டிருக்குந் தேவர்கள் மேனோக்கியெழுந்தன்மையுள்ள
அந்தச் சிங்கநாதவொலியால் மிகவும் வருந்தினார்களென்பதுசொல்லாமலே
விளங்கு மெனத் தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணிபடக் கூறினார்.  (356)

20.-வீமன்செய்தசிங்கநாதத்தால் யாவும் கலங்குதல்.

வரைகலங்கவனங்கலங்கக்கலங்குறாதமண்கலங்கவிண்கலங்க
                                     மகரமுந்நீர்த்,
திரைகலங்கத்திசைகலங்கவீறிலாத செகங்கலங்கவுகங்
                             கலங்கச்சிந்தைதூயோர்,
உரைகலங்கவுளங்கலங்கத்துளங்கிமெய்யிலூன்கலங்கவிலங்
                         கொடுபுள்ளினங்கள்யாவும்,
நிரைகலங்கவுலகினு யிர்படைத்ததம்மினிலைகலங்காதன
                          வுண்டோநிகழ்த்தினம்மா.

     (இ-ள்.) வரைகலங்க - மலைகள்நிலைகுலையவும்,வனம் கலங்க -
காடுகள் நிலைகலங்கவும்,கலங்குறாதமண் - அசையுந் தன்மையில்லாத
இந்தப்பூமியும், கலங்க-,விண் கலங்க-,மகரம் முந்நீர் திரை கலங்க -
சுறாமீனைக்கொண்ட கடலின் அலைகலங்கவும், திசை கலங்க -
திக்குக்கள் கலங்கவும், ஈறுஇலாத -