முடிவில்லாத [மிகப்பலவான],செகம் - உலகங்களெல்லாம், கலங்க-,உகம் கலங்க - காலமும்நிலைகலங்கவும்,-சிந்தைதூயோர் உரை கலங்க - மனந்தூய்மையரான பெரியோரின்பேச்சுங் கலங்கவும்,-உளம்கலங்க - (அவர்களுடைய) மனமுங் கலங்கவும்,-துளங்கி மெய்யில் ஊன் கலங்க - அசைதலுற்று உடம்பிலுள்ள தசை கலங்கவும், விலங்கொடு புள் இனங்கள் யாஉம் - மிருகங்களோடு பறவைக்கூட்டங்களெல்லாமும், நிரை கலங்க - கூட்டங் கூட்டமாய்க் கலங்கவும்,-(இங்ஙன்),-உலகின்- உலகிலே, உயிர் படைத்த தம்மின் - உயிர்படைத்தபொருள்களில், நிகழ்த்தின் - சொல்லுமிடத்து, நிலைகலங்காதன உண்டுஓ-? [இல்லை];(எ-று.) அம்மா -வியப்பிடைச்சொல்: ஒருவனுடைய சிங்கநாதத்தால் இங்ஙனம் எல்லாம் நிலைகலங்கலாயிற்றேஎன்று வியந்தவாறு. சொற்பொருட்பின்வருநிலையணி. உலகத்திலே உருவத்தையும் பெயரையும்படைத்த எல்லாப்பொருட்கும் உயிருண்டென்பது வேதாந்திகளின்கொள்கை யாதலால், 'வரைகலங்க'என்று தொடங்கிய கவி, 'உலகினுயிர்படைத்ததம்மினிலைகலங்காதனவுண்டோ'என்று முடித்தார். (357) வேறு. 21.-ஆறுகவிகள்- குளகம்: அவ்வொலிகேட்ட அநுமான் வீமசேனன் செல்லும்வழியிலிருத்தல். அந்தவோதையப் பொழிலிடைத் தவம்புரிந் தருளும் மந்தராசல மனையதோண்மாருதி கேட்டு விந்தமன்னதிண் புயாசல வீமனுக் கெதிர்போய் முந்தமற்றவன் வருநெறி யதனிடை முன்னி. |
(இ-ள்.) அபொழிலிடை - அந்தக் கதலிவனத்திலே, தவம் புரிந்தருளும் - தவஞ்செய்துகொண்டிருந்தருளுகிற, மந்தர அசலம் அனைய தோள் மாருதி - மந்தரமலையையொத்ததோள்களையுடையஅனுமான், அந்த ஓதை - (வீமசேனனாலுண்டான)அந்தப்பேரொலியை, கேட்டு - செவியுற்று, விந்தம் அன்ன திண் புயஅசலம் வீமனுக்கு எதிர்போய் - விந்திய கிரியையொத்த வலிய தோள்களாகிய மலைகளையுடைய அவ்வீமசேனனுக்கு எதிரிற்சென்று, முந்த அவன் வரும் நெறியதனிடை முன்னி - முதலில் அவன் வருகிற வழியில் நெருங்கி,-(எ-று.)-'நீட்டி'என அடுத்த கவியோடு தொடரும். தவம்புரிதல்,இந்தக்கற்பாந்தத்தில் பிரமனது பதவியைப் பெறுதற்கென்க. தவமாவது - தன்உயிருக்குவருந் துன்பங்களைப் பொறுத்துப் பிறஉயிர்களைஓம்புதலாதலின்'புரிந்தருளும்' எனப்பட்டது; இனி, 'அருள்'துணைவினையெனினுமாம்;பெரியோர்களின் செயலைக் கூறுமிடத்து 'அருள்'என்பதைத் துணைவினையாகச்சேர்த்துக் கூறுதல், மரபு. மந்தரமலைபாற்கடலைக்கடைந்து கலக்கினது |