கிரிக்குக்குகை, இயற்கையடைமொழி, 'நகைத்துநாகமு நடுங்கிட நடந்தனனடந்து'என்று பிரதிபேதம். (361) 25.-அனுமான்வீமனைக்கண்டு'நீயார் அடா?'என்று வினவுதல். அண்டர்தானவரரக்கரு மணுகுறாவனத்தில் எண்டிசாமுகமெங்கணு மிரிந்திவார்த்து மண்டிமேல்வருமானுட னாரடாவென்றான் சண்டவாயுவின்றனயனைமற்றவன்றமையான். |
(இ-ள்)சண்டம் வாயுவின் தனயனை- உக்கிரமான வாயுவினது குமாரனானவீமனைநோக்கி, அவன் தமையன் - (வரும்வழியிலிருந்த) அவனது முன்னவனானஅனுமான், 'அண்டர்தானவர் அரக்கர்உம் அணுகுறாவனத்தில்-தேவர் அசுரர் இராக்கதர் என்னும் இவர்களும் கிட்டவரவொண்ணாதஇக்கதலிவனத்திலே, எண் திசாமுகம் எங்கண்உம் இரிந்திட ஆர்த்து - எட்டுத்திக்குகளினிட முழுவதும் அஞ்சியோடும்படி ஆரவாரித்து, மண்டி மேல் வரும் - நெருங்கி எதிரில் வருகிற, மானுடன் மனிதனே! (நீ), ஆர் அடா - யாரடா?' என்றான்என்று வினவினான்: (எ-று)-மற்று-அசை. இங்ஙனம்அனுமான் தோன்றினது, வீமசேனன் வழியிடையில் யாதோரிடையூறுமின்றி இனிது காரியம் முடித்துச் செல்ல வேணுமென்னும் விருப்பத்தினாலேயேயென்பது, முதனூலில் விளங்கும். அண்டர்- அண்டகோளத்தின் மேலிடத்திலுள்ளவர். எண்டிசாமுகம்-நான்கு பெருந்திசையும் நான்கு கோணத்திசையும். தமையன்-தம்ஐயன் எனப்பிரித்துத் தமது தலைவனெனக்கொண்டுகாரணப் பெயராக்குக. (362) 26.-வீமன்'நீயார்?'என்று அவ்வனுமானைமாறு வினாவுதல். தம்முனாகியவானரஞ்சாற்றியவுரைகேட்டு எம்முனாகிவந்திருந்தநீயார்கொலென்றிசைத்தான் தெம்முனாயினுஞ்செவ்விமென்தேகமாமகளிர் தம்முனாயினுநாத்தவறாவடல்வீமன். |
(இ-ள்) தெம்முன் ஆயின்உம் - பகைவரின் முன்பானாலும்,செவ்வி மெல் தேகம் மா மகளிர்தம் முன் ஆயின்உம்-அழகிய மென்மையான சரீரத்தையுடைய சிறந்த பெண்களது முன்பானாலும்,நா தவறா-நாக்கினாற் சொல்லும்வாய்மை தவறுதலில்லாத, அடல் வீமன்-வலிமையுடைய வீமசேனன்,-தம்முன்ஆகியவானரம் சாற்றிய உரை கேட்டு-தனக்குத் தமையனானஅனுமான் சொன்ன வார்த்தையைச் செவியுற்று, எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார் கொல் என்று இசைத்தான்-எமக்கு எதிரிற் பொருந்தி வந்திருந்த நீ யாவனோ? என்று அவனைஎதிர் வினவினான்; (எ-று.) |