இதனால்,முதலில் 'யார்கொல்நீ'என்ற அநுமான் வினாவிற்கு விடையிறுத்தவாறு. தாமம் - வெற்றிமாலையுமாம். (369) 33.-அனுமான்வீமனைநோக்கி'ஸ்ரீராமன்புகழை உனக்கு யார் சொன்னவர்?'என்று வினவல். அன்னவாசகமவனுரைத் தலுமிகலனுமான் கன்னபாகமுஞ்சிந்தையு முந்துறக்களித்து மின்னுவார்சிலையிராகவன்மெய்ப்பெருஞ்சீர்த்தி சொன்னவாறுநன்றுனக்கிதார் சொற்றவரென்றான். |
(இ - ள்.)அன்ன வாசகம் - அவ்வார்த்தையை, அவன்-அந்த வீமன், உரைத்தலும் - சொன்னவுடனே,-இகல் அநுமான்-பராக்கிரமத்தையுடைய அநுமான்,-கன்னபாகம்உம்-காதின் பகுதியும், சிந்தைஉம் - மனமும், முந்துற - முற்பட, களித்து-மகிழ்ச்சியடைந்து,-மின்னு வார் சிலைஇராகவன் மெய் பெருஞ் சீர்த்தி - மின்னுகின்ற நீண்ட விற்படையையுடைய இராமபிரானுடைய உண்மையான பெரியமிக்க புகழை, சொன்ன ஆறு-(நீ) சொல்லியவகை, நன்று-இனிது:உனக்கு-, இது-இந்தராகவன் பெருஞ் சீர்த்தியை, ஆர் சொற்றவர்-சொன்னவர் யாவர்?என்றான்- என்று வினாவினான்;(எ - று.) கன்னபாகம் =கர்ணபாகம்:வடசொற்றொடர். "சீர்த்திமிகுபுகழ்" என்பது, தொல்காப்பியம். (370) 34.-பரத்துவாசன்சொல்லக் கேட்டுளேனென்று வீமசேனன்விடையிறுத்தல். வரத்தினாலருமறையினால்வார்சிலைபயிற்றும் பரத்துவாசன்முன்பகர்தரக் கேட்டனன்பலகால் திரத்தினாலுயரிராகவன்சிலைவலியென்றான் உரத்தினாலொருவீரருமொப்பிலாவுரவோன். |
(இ - ள்.)உரத்தினால்- வலிமையிலே, ஒரு வீரரும்-, ஒப்புஇலா - (தனக்கு) உவமையாகப் பெறாத,உரவோன் - வலிமையையுடையவனாகிய வீமசேனன்,-'திரத்தினால்உயர் - உறுதிப்பாட்டினால்மேம்பட்ட, இராகவன் - இராமபிரானுடைய, சிலைவலி - வில்லின் வல்லமையை, வரத்தினால்- மேன்மையாக, அரு மறையினால்-அருமையானவேத மந்திரங்களோடு, வார் சிலை- நீண்டவில்லை,பயிற்றும்-பழக்கிய, பரத்துவாசன் - துரோணன், முன் - முன்பு, பகர் தர - சொல்ல, பலகால் கேட்டனன்-பலமுறை கேட்டுள்ளேன்',என்றான்- என்று கூறினான்;(எ-று.) பாண்டவர்க்குவில்வித்தை பயிற்றுவித்த ஆசிரியனாகியதுரோணன் பரத்துவாசகுமார னாதலால்அவன் 'வார்சிலைபயிற்றும் பரத்துவாசன்' எனப்பட்டான்: ஆகவே, பரத்துவாசன், என்பது - பரத்வாஜன் என்பதன் விகாரம். துரோணன் பரத்துவாச |