குமாரனென்பதை"பரதநாதவேதபரத்துவாசனென்பான், விரத வேள்விதன்னின் மேனகையாலான, சுரததாது வீழ்ந்த துரோண கும்பந்தன்னில், வரதனொருவன் வந்தான் வசிட்டமுனியோடொப்பான்" என்று ஆதிபருவத்தில் வந்தது கொண்டும் அறியலாம். (371) 35.-இரண்டுகவிகள்-ஒருதொடர் : அநுமான் தன்னைத் தெரிவித்தல். குந்திகான்முளைகூறியவாசகங்கேட்டுப் புந்தியாலுயரஞ்சனைபுதல்வனும்புகல்வான் சிந்துசீகரத்சிந்துமுன் கடந்துசெந்தீயால் உந்துவாள்வலிநிருதரூ ரொருங்குசுட்டவனும். |
(இ - ள்.)குந்தி கான்முளை- குந்தியின் குமாரனானஅந்தப் பீமசேனன், கூறிய - சொன்ன, வாசகம் - வார்த்தையை, கேட்டு-, புந்தியால் உயர் - அறிவினால்மேம்பட்ட, அஞ்சனைபுதல்வன்உம்- அஞ்சனாதேவியின்புதல்வனானஅனுமானும், புகல்வான் - (பின் வருமாறு) சொல்பவனானான்:-'சிந்துசீகரம் - (அலைகளின்மூலமாகத்) தெறிக்கின்ற நீர்த்திவலைகளையுடைய,சிந்து - கடலை,முன் கடந்து-, செந் தீயால் - (அரக்கர் தன் வாலிற் கொளுத்திய) செந்நிறத் தீயைக்கொண்டு,-உந்து- மேலெறிகின்ற, வாள் வலி - வாட் படையின் வலிமையையுடைய, நிருதர் - அரக்கருடைய, ஊர்-இலங்காபுரியை, ஒருங்கு - ஒருசேர, சுட்டவன்உம் - எரியுமாறு செய்தவனும்,-(எ-று.)-'சிந்தைசெய்பவனும்'என்று மேலே தொடரும். கான்முளைஎன்பது - சந்ததி முளைப்பதற்குக்காரணமானது என்ற காரணம்பற்றி, மகவைக் காட்டும். அநுமான் வீமன் என்ற இருவரும் வாயு புத்திரராயினும், ஒருத்தர் குந்தியின் புதல்வரும், மற்றொருத்தர் அஞ்சனையின்புதல்வரும் என்ற வேறுபாடு உடைமையால், அத்தன்மையை இந்தச் செய்யுளில் விளக்கினார். (372) 36. | அந்தவார்சிலையிராமனுக்கடிமையாயென்றும் சிந்தையாலவன்றிருப்பதஞ் சிந்தைசெய்பவனும் உந்தையாகியவாயுவுக் குற்பவித்தவனும் இந்தவாழ்வுடையனுமனே யென்றனனிகலோன். |
(இ - ள்.)அந்த வார் சிலைஇராமனுக்கு அடிமை ஆய் - அவ்வாறு (உன்னாற்புகழ்ந்து) கூறப்பட்ட நீண்ட வில்லையுடையஇராமனுக்கு அடியவனாகி,என்றுஉம் - எப்பொழுதும், சிந்தையால் - மனத்தினால், அவன் திரு பதம் சிந்தை செய்பவன்உம் - அவனது திருவடிகளைத் தியானஞ் செய்பவனும், உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவன்உம் - உனது தந்தையான வாயுதேவனுக்குப் பிறந்தவனும், இந்த வாழ்வு உடை அனுமன்ஏ - இந்த வாழ்க்கையையுடைய அனுமானாகியநானே',என்றனன் - என்று கூறினான்:(யாவனென்னில்),-இகலோன் - வலிமையையுடைய ஆஞ்சனேயமூர்த்தி; |