நெருங்குவது,அரிது-முடியாது;(எ-று.)-ஆல்-ஈற்றசை: தேற்றமுமாம்.(380) 44. | அறிவும்வாய்மையுந்தூய்மையு மன்புமின்னருளும் பொறையுஞானமுங்கல்வியும் புரிபெருந்தவமும் நெறியுமானமும்வீரமு நின்னவாதலினால் பெறவுனக்கரிதாயதே தென்றனன்பெரியோன். |
(இ-ள்.)அறிவுஉம் - புத்தியும், வாய்மைஉம் - சத்தியமும்,- தூய்மைஉம்-மனச்சுத்தியும், அன்பும்-,இன் அருள்உம் - இனிய கருணையும்,பொறைஉம்-பொறுமையும், ஞானம்உம்-கல்வியறிவும், கல்விஉம்-,புரி பெருந்தவம்உம் - செய்கின்ற மிக்கதவமும், நெறிஉம்- நீதியும், மானம்உம்-ரோஷமும், வீரம்உம்-பராக்கிரமமும், நின்ன- நின்னிடத்திலுள்ளன: ஆதலினால்-,உனக்கு பெற அரிது ஆயது ஏது- உனக்குப்பெறுதற்கு அருமையாயிருப்பது எது? என்றனன்-என்று கூறினான்:(யாவனெனில்),-பெரியோன்- பெருந் தோற்றமுள்ளவனாகிய அநுமான்;(எ-று.)-பெரியோன் மூத்தோனெனினுமாம். இதனால்,அறிவு முதலியவற்றைப் பெற்றுள்ள உன்னால்அந்தமலர் பெறுதற்கு எளிதேயென்று கூறியவாறு. அறிவு என்பது-இயற்கையறிவையும், ஞானம் என்பது - கல்வி கேள்விகளினாலாகியசெயற்கையறிவையுங் காட்டுமென்க. நின்ன - பலவின்பால்முற்று. (381) 45.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: ஏற்றதுணை இருத்தலால்யாவர்காத்தாலும் மலரைக் கவர்வே னென்று வீமன் கூறுதல். முன்னவன்புகலுறுதிகூர் மொழியெலாங்கேட்டுப் பின்னவன்றொழுதிவையிவைபேசினன்பின்னும் மன்னர்மன்னவனறமுண்டு மறமுண்டுவழக்கே உன்னினுன்னருளுண்டுதிண் டோளுரமுண்டால். |
(இ-ள்.)முன்னவன் - தமையனாகியஅநுமான், புகல் - கூறிய, உறுதி கூர்-நிச்சயம்மிக்க, மொழிஎலாம் - வார்த்தைஎல்லாவற்றையும், கேட்டு-,- பின்னவன்-தம்பியாகிய வீமன், தொழுது - (அநுமானை)வணங்கி, இவை இவை-இவ்விவ்வார்த்தைகளை,பின்னும் பேசினன்-மேலும் பேசலானான்: மன்னர் மன்னவன் - அரசர்க்குட் சிறந்தவனானதருமபுத்திரனுடைய, அறம் - தருமம், உண்டு - இருக்கிறது:மறம் உண்டு - ரோஷம் உள்ளது: வழக்குஏ உன்னின்-முறைமையாக ஆலோசித்தால்,-உன் அருள் உண்டு- (உன்னுடைய) கருணையுண்டு: திண் தோள் உரம் உண்டு - என்னுடைய வலியதோளின் வலியும் உள்ளது;(எ-று.) இவையெல்லாம்மலரைக்கொணர்தற்குத் துணையாகுமென்றவாறு. 'திண்டோளுரமுண்டு'என்று தன்தோள்வலிமையைச் சொல்லுவதால், மறம்என்பது-ரோஷத்தை யென்க. (382) |