திண் - வலிய, மெய்வகை - உடம்பின் வடிவத்தை, கொண்டது - கொண்டதை, மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் - மேகங்களின் வகை சேர்தற்கு இடமான அகன்ற வானுலகத்தவரான தேவர்களெல்லாம், கண்டு-,வியந்தார் - ஆச்சரியமடைந்தார்; அநுமானது வலியபேருருவத்தின் சுமை பூமியின் கீழிருந்து தாங்கும் நாகர்களின் படங்களையழுத்துவதனால்,அவை சுருங்குமென்க. சம்வர்த்தம் முதலாக மேகங்கள் எழுவகைப்படுமாதலால், 'மைவகைசேரகல்வான்'என்றது. நாகர் பணங்கள் சலிக்க என்று பிரதிபேதம். (391) 55.-வீமன்அநுமானைக்காலிளைவுக்குமேற் காணமாட்டாமை. மேலளவாது விளங்கியசொன்மெய்ந் நூலளவாகிய நுண்ணறிவோர்போன் மாலளவன்றி வணங்குதலில்லான் காலளவல்லது கண்டிலன்வீமன். |
(இ-ள்.) மேல்அளவாது - மேலெழுந்தவாறு போகாமல் [ஆழ்ந்து ஊடுருவிப்போய்],விளங்கிய - (அதனால்புத்திக்குத்) தெளிவாகத் தெரிந்த, சொல்- (பல அருமையான விஷயங்களைச்)சொல்லுகின்ற, மெய் நூல் - தத்துவ சாஸ்திரங்களின், அளவு ஆகிய - அளவிலே பொருந்திய, நுண் அறிவோர் போல் - நுட்பமான அறிவையுடையவர்போல,-வீமன்-,-மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான் - (ஸ்ரீராமபிரானாகிய)திருமாலின் பெருமையை (வியந்து அவனை)அன்றி (வேறொருகடவுளை) வணங்குதலில்லாத அந்த அநுமானுடைய, கால் அளவு அல்லது - காலினளவையன்றி, கண்டிலன் - மேலே காணமாட்டாதவனாயினான்; நுண்ணறிவோர்போல மாலளவன்றி வணங்குதலில்லான் என்று கூட்டாது, நுண்ணறிவோர் பரம்பொருளின் திருவடிகளிலேயே பக்தி செலுத்துபவராதல்போல, வீமனும் காலளவே கண்டனன் என்று உரைத்தலும் ஒன்று. மேலளத்தல் - ஆழ்ந்து நோக்காது நுனிப்புல் மேய்ச்சலாக அறிதல். "கற்றநூலளவேயாகுமா நுண்ணறிவு","கற்றனைத்தூறுமறிவு" என்பன காண்க. 56.-வீமன்அந்த அநுமானது சோதிமேனியைக் கண் கொண்டுபார்க்கமுடியாது சுருக்கிக் கொள்ளுமாறு வேண்டுதல். அருக்கனின்மும்மடி யாரொளிவீசும் உருக்கிளர்மேனியை யூடுறநோக்கா வெருக்கொடுதாண்மிசை வீழ்ந்தனன்மீண்டும் சுருக்குகவென்று துதித்தனன்வீமன். |
|