பக்கம் எண் :

260பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) அருக்கனின்- சூரியனைக்காட்டிலும், மும் மடி - மூன்று
மடங்கு மிகுதியாக, ஆர் ஒளி வீசும் - மிக்க பேரொளியை வீசுகிற,-உரு
கிளர் மேனியை - உருவத்தோடு விளங்குகின்ற உடலை,ஊடு உற நோக்கா
- உள்ளுறப் பார்க்கமுடியாமல், வீமன்-,-வெருகொடு-(புத்தியில்)
அச்சமடைந்து, மீண்டுஉம் தாள்மிசை வீழ்ந்தனன் - மறுபடியும் (அந்த
அநுமானது) பாதங்களில் வீழ்ந்து, சுருக்குக என்று துதித்தனன்-இந்தப்
பேருருவத்தைச்) சுருக்கிக் கொள்வாயாக என்று தோத்திரஞ் செய்தான்; 
(எ-று.)

     கீழ் 49-ஆங்கவியில் "மோட்டுருத்தனைக்காட்டுக என்றிறைஞ்சினன்
முதல்வன்" என்று பேருருவைக் காட்டுமாறு அனுமானைவீமன்
இறைஞ்சினமை கூறப்பட்டதனால்,'மீண்டும்தாண்மிசை வீழ்ந்தனன்'
என்றது.                                                 (393)

57.-அநுமான்தன் மேனியை யொடுக்கிக் கொள்ளுதல்.

அந்தமுமாதியு மற்றவருக்கஞ்
செந்தமிழ்செய்து திரட்டினரைப்போல்
அந்தரம்வானு மகண்டமுமொன்றா
உந்தியமேனி யொடுக்கினனம்மா.

     (இ-ள்.)அந்தம்உம் ஆதிஉம் அற்றவருக்கு - ஆதியந்தமில்லாத
கடவுளின் திறத்திலே, அம் செந் தமிழ் செய்து - அழகிய செந்தமிழ்ப்
பிரபந்தத்தை யியற்றி, திரட்டினரை போல் - தொகுத்துள்ள
ஞானியரைப்போல, அந்தரம் வான்உம் அகண்டம்உம் - அந்தரமென்று
சொல்லப்படும் வானத்தையும் இந்த நிலவுலகத்தையும், ஒன்றுஆ உந்திய -
ஒன்றாகச்செலுத்திய, மேனி - (தன்) மேனியை, ஒடுக்கினன் - சுருக்கிக்
கொண்டான்;

     கடவுள்ஞானமுள்ளபெரியோர் அக்கடவுளின் திறத்துப் பக்திப்
பாடல்கள் பல பாடித் திரட்டினும் தாம் அடங்கி நிற்பது போலஇவனும்
அடங்கிநின்றானென்பதாம்.  அந்தமுமாதியுமற்றவருக்கு அம்
செந்தமிழ்செய்து திரட்டினர் என்றது - நம்மாழ்வாரைக் குறிக்குமென்னலாம்:
இனி முதலாழ்வார்களைக்காட்டு மென்னவுமாம்: வேறுவகை
கூறுவாருமுளர்.  தமிழ்-திவ்யபிரபந்தத்திற்குக் காரணவாகுபெயர்.  அம்மா -
வியப்பிடைச்சொல்: பேருருவை இவன் வேண்டியமாத்திரத்து ஒடுக்கினமை
பற்றியது.                                                (394)

58.-தன்பிழையைப் பொறுக்குமாறு வீமன் அநுமானிடம்
வேண்டுதல்.

இந்திரசால மியற்றினரைப்போல்
மைந்தொடுதொல்லையில்வடிவுகொள்பொழுதத்து
அந்தமிலாயடி யேன்பிழையெல்லாம்
புத்தியுறாதுபொறுத்தருளென்றான்.

     (இ-ள்.)இந்திரசாலம் இயற்றினரை போல் - மாயவித்தை
செய்தவரைப்போல, மைந்தொடு - (தன்) வலிமையுடனே, தொல்