பக்கம் எண் :

262பாரதம்ஆரணிய பருவம்

ரோடுஉம் - உனதுதம்பிமாரோடும், மின் அருகு பயில் - மின்னல் போன்ற
திரௌபதிதன் னருகே (அக்கினிகாரியத்தின் பொருட்டுப்) பொருந்தப்பெற்ற,
வேந்தொடுஉம் - யுதிட்டிரராசனோடும்,வாழ்வுஉற்று - (இவ்வுலகில்
வாழவேண்டியநாள் முழுவதிலும்) வாழ்ந்திருந்து, (பிறகு), என் அருகு
வருக-,என்றனன் - என்று கூறினான்;(எ-று.)

     மின் -உவமையாகுபெயர். வேந்து - பண்பாகுபெயர்.          (397)

61.-இயக்கரூர்க்குச்செல்லவழிகூறுமாறு
வீமன் அநுமானைவேண்டுதல்.

அங்கவனம்மொழி கூறலுமையா
எங்கணுநின்னுய ரின்னருளுண்டே
பங்கயமாநிதி வாழ்பதியெய்தச்
சங்கையினன்னெறி சாற்றுகவென்றான்.

     (இ-ள்.) அங்கு- அப்போது, அவன் - அந்த அனுமான்,- அ மொழி
- அவ்வார்த்தையை, கூறலும் - சொன்னவுடனே,-(வீமசேனன்அனுமானை
நோக்கி),-'ஐயா! நின் உயர் இன் அருள் எங்கண்உம் உண்டு ஏ-
உன்னுடைய உயரிய இனிய அருள் (எனக்கு) எங்கும் உள்ளதன்றே!
(ஆதலால்), பங்கயம் மா நிதி வாழ் - பதுமநிதியுள்ளதான, பதி - ஊரை,
எய்த - அடைதற்கு, சங்கை இல் நல் நெறி - சந்தேகிக்க வேண்டுவது
இல்லாத நல்ல வழியை, சாற்றுக - சொல்வாயாக',என்றான்-;(எ-று.)

     பங்கயமாநிதி- பதுமநிதி: இது நவநிதிகளுள் ஒன்று: குபேரன்
நவநிதி நாயக
னாதலால்,அங்குப் பதுமநிதியும் உள்ளதென்க.     (398)

62.-இதுமுதல்மூன்று கவிகள் - ஒருதொடர்: அநுமான்
வாசமலருள்ளஇடத்திற்குச் செல்லும் நெறிகூறி
அம்மலரைக்கொள்ளுதற்கு உரிய உபாயத்தையும்
கூறுவது.

என்றலுமிந்த வனத்தினதெல்லை
ஒன்றியவோசனையோரிருநூறு
சென்றபின்யோசனைசிற்சிலசென்றால்
மன்றன்மலர்பொழில் வாவியின்மன்னும்.

     (இ-ள்.)என்றலும்-என்று (வீமன் அநுமானை)வினாவியவுடனே,-இந்த
வனத்தினது - இந்தக்கதலீ வனத்தின், எல்லை- எல்லையினின்றும்,ஒன்றிய
ஓர் இருநூறு ஓசனைசென்றபின் - பொருந்திய இருநூறு யோசனைதூரங்
கடந்து சென்றபின்பு, யோசனைசில் சிலசென்றால்-(பின்னுஞ்)
சிலயோசனைதூரம்கடந்து போனால்,(அங்கு, மன்றல் மலர் -
நறுமணமுள்ள இதுபோன்ற மலர், பொழில் வாவியின் - சோலையிலுள்ள
நீர்நிலையிலே,மன்னும்-பொருந்தியிருக்கும்;(எ-று.)