பக்கம் எண் :

264பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)உறுதிஉம் - (மலரைப் பெறுதற்கு உரிய) நல்ல உபாயங்களையும்,
ஒன்னலர் ஊக்கம்உம் - பகைவர்களது கலங்காத் திண்மையையும், ஏகும்
நெறியினது எல்லையின்நீர்மைஉம்-செல்ல வேண்டும் வழியினது அளவின்
தன்மையையும், நெறியில் குறிகள்உம் - வழியிலுள்ள அடையாளங்களையும்,
யாவைஉம் - மற்றுமுள்ள எல்லாவற்றையும், அன்பொடுகூறி-அன்புடனே
சொல்லி,-அறிவு உடையான் - (ஐயந்திரிபில்லாத) ஞானத்தையுடைய
அனுமான்,-அன்பொடுவிடை அளித்தான் - அன்புடனே (தம்பிக்கு) விடை
கொடுத்தனுப்பினான்;(எ-று.)

     அனுமான்இளமையிற் சூரியனிடத்து எல்லா நூல்களையும்ஐயந்திரிபு
அற ஓதி உணர்ந்த உயர்வுதோன்ற, அவனை'அறிவுடையான்'என்றார்.
இனி, அறிவு உடையான் - என்றுந் தனது இயற்கையறிவு
கெடாதவனென்றுமாம். விடை - விடுத்தல்: ஐ - தொழிற்பெயர்விகுதி.
ஒன்னலர் - ஒன்றலர்: மரூஉ: எதிர்மறை வினையாலணையும்பெயர்;
சேராதவர் என்பது பொருள்.                              (402)

66.-வீமன்அநுமானுக்கு முகமன்கூறிச் செல்லுதல்.

மொய்ம்புடைமாருதி தாளிணைமுன்னா
வெம்பியகானிடை மேவியபயனிங்கு
எம்பெருமானுனையெய்தினனென்னா
நம்பியுநாழிகை யொன்றினடந்தான்.

     (இ-ள்.)நம்பிஉம் - ஆடவரிற் சிறந்த வீமனும், மொய்ம்பு உடை
மாருதி தாள் இணைமுன்னா- வலிமையையுடைய அனுமானது இரு
திருவடிகளைத்தியானித்துக்கொண்டு, 'எம்பெருமான்- எமது தலைவனே!
வெம்பிய கானிடை மேவிய பயன் - வெப்பம் பொருந்திய காட்டிலே (நான்)
வந்ததன் பயனாக,உனைஇங்கு எய்தினன்-உன்னைஇவ்விடத்திலே
அடைந்தேன்,'என்னா-என்று(உபசார வார்த்தை) கூறி, நாழிகை ஒன்றில்
நடந்தான் - ஒரு நாழிகைப்பொழுதினுள்ளே நடந்துசென்றான்;(எ-று.)

     நாழிகை -இருபத்துநான்கு நிமிஷங்கொண்ட நேரம்;நாடிகா என்னும்
வடமொழிச் சிதைவென்பர். மொய்ம்புஉடைமாருதி - (பகைவருடைய)
வலிமையை அழிக்குந்தன்மையுள்ள அனுமான் என்றுமாம்.  எம்பெருமான் -
அண்மைவிளி.                                             (403)

67.-சக்கரமலையின்புறத்தைவீமசேன னடைதல்.

அக்கணமாசுவி னாசுகன்மைந்தன்
மிக்குயர்விஞ்சையர் நாட்டிடைவிட்டுத்
திக்குறைநாகர் திரண்டுதுதிக்குஞ்
சக்கரநாக மதன்புடைசார்ந்தான்.

     (இ-ள்.) அகணம்-அந்தக்ஷணத்திலே, ஆசுவின் - விரைவாக,
ஆசுகன் மைந்தன் - வாயுகுமாரனாகியவீமசேனன்,-மிக்கு