உயர்-மிகச்சிறந்த,விஞ்சையர் நாடு-வித்தியாதரர்நாட்டை, இடைவிட்டு- கடந்து, திக்குஉறை நாகர்-திக்குக்களில்வாழ்கின்ற தேவர்கள், திரண்டு-, துதிக்கும்-(தன்னைத்)துதிக்கின்ற, சக்கரநாகம் அதன்புடை-சக்கரமலைக்குப் பக்கத்திலே, சார்ந்தான்-சேர்ந்தான். (404) 68.-திவாகரமலையெல்லையைக்குறுகல். தவாமறைவாணர் தவம்புரியுந்தண் கவானுடைநீள்குக ரத்துயர்கலைசேர் உவாமதிசூழ்வரு மோங்கலொடொக்குந் திவாகரமால்வரை சேர்ந்திடுமெல்லை. |
ஆறுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.)தவா-அழிதலில்லாத, மறை-வேதங்களைக்கொண்டு,வாணர்- வாழ்ச்சிபெறுபவரான முனிவர், தவம் புரியும் - தவஞ்செய்கின்ற, தண்- குளிர்ந்த, கவான்உடை-பக்கத்தையுடையதும், நீள்குகரத்து-நீண்ட குகைகளையுடையதும்,உயர் கலைசேர் உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும் - மிக்க[பதினாறான]கலைகள்சேர்ந்தபூர்ணிமைச்சந்திரன் சூழ்ந்துவரப்பெற்ற (மேரு) மலையோடுஒப்பதுமான,திவாகரம் மால் வரை- திவாகரமென்ற பெருமலையை,சேர்ந்திடும் எல்லை- சேரும்போது,-(எ- று.)-"அரித்துவசன்றனைநோக்கி அரக்கன் இவை கட்டுரை செய்வான்" என எழுபத்து மூன்றாங்கவியில் முடியும். சந்திரனைக்கூறியது, சூரியனுக்கும் உபலட்சணம். மேருமலையைச் சூரியன் முதலிய கிரகங்கள் சுற்றிவருகின்றன என்பதும், சூரியன் மேருமலையைச்சுற்றி வருவதால்தான் பகலும் இரவும் உண்டாகின்றன என்பதும் நூற்கொள்கை. மதிக்குக்கொடுத்த அடைமொழியால் சிறப்புப்பொருள் பெறப்படுவதாகத் தெரியவில்லை. (405) 69.-இதுமுதல்நான்குகவிகள்-புண்டரீகனென்னும் அரக்கனது வருணனை. அஞ்சனமேகமொ டாலமளாவி வஞ்சனைகொண்டுவகுத்தனமெய்யான் குஞ்சிகள்வானி னிடைக்கொடியோடிச் செஞ்சுடர்காறரு கின்றசிரத்தான். |
(இ-ள்.)அஞ்சனம் மேகமொடு - கறுத்த மேகத்தோடு, ஆலம்- விஷத்தை, அளாவி-கலந்து வஞ்சனைகொண்டு - வஞ்சனைக்குணத்தையும் உடன்சேர்ந்து, வகுத்து அன-படைக்கப்பட்டாற்போன்ற, மெய்யான் - உடம்பையுடையவனும்,-குஞ்சிகள்- (செம்பட்ட) மயிர்கள், வானின் இடை- ஆகாயத்திலே, கொடி ஓடி-மின்னற் கொடிபோலப் போய், செஞ்சுடர்- செந்நிற ஒளியை, கால் - வெளிப்படுத்துதலை,தருகின்ற-செய்கின்ற, சிரத்தான் - சிரத்தையுடையவனும்,- (எ-று.) |