பக்கம் எண் :

270பாரதம்ஆரணிய பருவம்

     இது வானத்திலேசரீரமில்லாததாய்க் கேட்கப்படுதலால்,
ஆகாயவாணியென்றும், அசரீரியென்றும் கூறப்படும்.  தோமரம்-படையென்ற
பொருளில் வந்தது: 
சிறப்புப்பெயர்பொதுப்பொருளது:"தொட்ட
கொடுங்கதை தோளுறுமுன்னர்...விழுந்தான்"(81) என மேல் வருவதால்
இங்ஙன்கொள்ளவேண்டும்.  தோளில் படை செலுத்தப்பட்டால்
உயிரிழக்குமாறு இவனுக்கு முனிவன் சாபமென்க.               (416)

80.-வீமசேனன்புண்டரீகவரக்கனுடைய தோள்மேற்
கதையை ஏவுதல்.

அங்கசரீரி யரற்றியமாற்றம்
சங்கையுறாதுசமீரணிகேட்டுப்
பங்கயநாம நிசாசரபதிதன்
துங்கவயப்புய மேற்கதைதொட்டான்.

     (இ-ள்.)அங்கு-அவ்விடத்து, அசரீரி-ஆகாயவாணி, அரற்றிய-
உரக்கச்சொன்ன, மாற்றம்-வார்த்தையை, சமீரணி-வாயுகுமாரனான
வீமசேனன், சங்கை உறாதுகேட்டு - சங்கை கொள்ளாமல் செவியேற்று,
பங்கயநாம நிசாசரபதி தன்-புண்டரீகனென்று பேருள்ள அரக்கனுடைய,
துங்கம் - உயர்வாகிய, வயம்-வெற்றிபொருந்திய, புயமேல் - தோளின்மீது,
கதை தொட்டான் - கதைகொண்டு மோதினான்;(எ - று.)

    அசரீரிவார்த்தையில் நம்புதல்கொண்டு புயமேற் கதையைக்
தொட்டானென்பார் 'சங்கையுறாதுகதை தொட்டான்'என்றார்.
சமீரணி=ஸமீரணி:ஸமீரணனுடையகுமாரன்என்று அவயவப் பொருள்:
ஸமீரணன்- வாயுதேவன்.  அரற்றிய சாபம் என்று பிரதிபேதம்.     (417)

81.-வீமன்கதைமேலேதீண்டுதலும் புண்டரீகன்
வீழ்ந்திடுதல்.

தொட்டகொடுங்கதை தோளுறுமுன்னர்ப்
பட்டுளநொந்து பதைத்தடல்வஞ்சன்
வட்டநெடுங்கட லூடுமருத்தன்று
இட்டபெருங்கிரி யென்னவிழுந்தான்.

     (இ - ள்.)தொட்ட - (வீமசேனன்) தாக்கிய, கொடுங் கதை-கொடிய
தண்டாயுதமானது, தோள் உறும் முன்னர் - தோளிற் படுதற்குமுன்னமே
[தோளிற்பட்டவுடனே],-பட்டு - (கதை) தீண்டுதலால், உளம் நொந்து-
மனம்வருந்தி, பதைத்து-துடித்து, அடல் வஞ்சன் - வலிமையையுடைய
வஞ்சனைக்குணமுடையவனாகியஅந்தப்புண்டரீகராட்சதன்,- வட்டம் நெடுங்
கடலூடு - வட்டவடிவாகவுள்ள பெரிய கடலிலே, மருத்து - வாயுதேவன்,
அன்று - முற்காலத்தில், இட்ட-கொண்டு செலுத்திய, பெருங் கிரி என்ன -
பெரியமலைபோல,விழுந்தான்-;(எ-று.)