அண்டர் + மாநகர் =அண்டமாநகர்;உயர்திணையீறுவிகாரப்பட்டது. உம்மை - உயர்வு. அளகை - குபேரன்நகரம். (420) 84.-வீமன் தான்நாடிவந்த மலர்ப்பொழிலையடைதல். அந்தமாநகரின்றென்பா லகல்விசும்புறநின்றோங்கும் விந்தமாமென்னநின்று விளங்குதோள்வீமசேனன் முந்தைமாருதிநண்போடு மொழிவழியெய்தியந்தக் கந்தவான்பொழிலுநன்னீர்க் கடிமலர்த்தடமுங்கண்டான். |
(இ - ள்.)அகல் விசும்பு உற நின்று ஓங்கும் - (முன்னொரு காலத்தில் மலையரசனாகியஇமவானோடுபகைத்துச் சூரியசந்திராதியரது கமனமுந் தடைப்படும்படி) பரந்த ஆகாயத்தை யளாவ உயர்ந்துநின்ற, விந்தம் ஆம் என்ன-விந்தியபருவதத்தை யொக்கும் (இது) என்னும்படி, நின்று விளங்கு - நிலைபெற்றுவிளங்குகின்ற, தோள் - புயங்களையுடைய, வீமசேனன்-, முந்தை மாருதி நண்போடு மொழி வழி எய்தி - முன்பு அனுமான் (தன்னிடத்து) அன்புடனே சொன்ன வழியிற் சேர்ந்து, அந்த மா நகரின் தென்பால்-அந்தப்பெரிய அளகாபுரியின் தென்புறத்திலே, கந்தம் வான் அந்த பொழில்உம் - பரிமளத்தையுடைய உயர்ந்த (தான் குறித்துவந்த) அச்சோலையையும்,நல் நீர் கடிமலர் தடம்உம்-(அதிலுள்ள) சிறந்தநீரையும் வாசனையுடையபூக்களையுமுடையதடாகத்தையும், கண்டான்-பார்த்தான்; (எ - று.) விந்தம்=விந்த்யம்:வடமொழித்திரிபு. இங்கே 'அகல்விசும்புற நின்றோங்கும்விந்தம்'என்றது -அகத்தியமகாமுனிவரால் அடக்கப்படுவதற்கு முன்பு அம்மலைஎழுந்த நிலையை. முந்தை - ஐயீற்றுடைக்குற்றியலுகரம். முந்தை மாருதி என்பதற்கு - பழமையான அனுமா னென்றும், தனக்குமுன்பிறந்த அனுமா னென்றும் பொருள் கொள்ளலாம். கடி - உரிச்சொல். தெற்கு+பால்=தென்பால்;[நன்- உயிர்-35.] (421) 85.-நான்குகவிகள் -அப்பொழிலைக்காப்பவரின் வருணனை. ஆயிடைக்குறுகுமெல்லையப்பொழில்துப்பிற்காப்போர் சேயிடைப்பரந்தமார்பர் சேணிடைக்கடந்ததோளர் வாயிடைப்பிறைகளென்ன வளைந்தவாளெயிற்றர்வஞ்சத் தீயிடைச்சோரிதோய்ந்து திரண்டெனச்சுழல்செங்கண்ணர். |
(இ - ள்.) அஇடை குறுகும் எல்லை- (வீமன்) அவ்விடத்தைச் சேருமளவில், அ பொழில் துப்பின் காப்போர் - அந்தச் சோலையை வலிமையாற் காப்பவர்களும், சேய் இடை பரந்த மார்பர் - நெடுந்தூரம் பரவின மார்பையுடையவர்களும், சேண் இடை கடந்த தோளர் - ஆகாயத்தினிடத்தையுங் கடந்து உயர்ந்த தோள்களையுடையவர்களும், வாயிடை பிறைகள் என்ன வளைந்தவாள் எயிற்றர் - வாயிலே பிறைச்சந்திரர்போல வளைந் |