பக்கம் எண் :

278பாரதம்ஆரணிய பருவம்

இச்சோலையைக்கண்களாற் பார்த்தற்கு நினைத்தாலும்(நம்மால்)
வருந்துவார்கள்: (அங்ஙனமிருக்க), மதி இலாத மானுடா - அறிவில்லாத
மனிதனே!  வந்தது என் - (நீ இங்கே) வந்த காரணம் என்ன?  உன்தன்
ஆவி சிந்தும் முன் செப்புக - உனது உயிர் (எம்மால்) அழிதற்குமுன்பு
சொல்லுக,'என்னா- என்றுகூறி, தீயோர் எல்லாம் - கொடிய அவ்வரக்கர்
யாவரும், தெழித்தனர் - (வீமனை)அதட்டினார்கள்;(எ-று.)

     இமையவர்தாமும், உம்மை - உயர்வுசிறப்பு.  நோக்கவும் என்ற
உம்மை - இழிவுசிறப்பு.  'கண்ணால்'என்ற அவசியமில்லாத பதம்,
அவர்கள் கண்கள் இச்சோலையைப்பார்த்தற்கேற்ற சிறப்புடையன
அல்லஎன்னும் இழிவை யுணர்த்தும்: அன்றி, மனத்தால் நோக்குதலினும்
வேறுபாடு தோன்ற, 'கண்ணால்நோக்க'என்றதாகவுங் கொள்ளலாம்.  (429)

93.-அவ்வரக்கரின்பொருளில்லாச் சொல்லைக்கேட்டு
வீமன் சிரித்தல்.

அருளிலாவரக்கரிவ்வா றகங்கரித்தரற்றுமிந்தப்
பொருளிலாவுரைகட்கெல்லா முத்தரம்புகலானாகி
இருளிலாமுத்தமன்ன வெயிற்றரும்பிலங்கநக்கான்
தெருளிலாமதனைமுன்னமெரித்திடுஞ்சிவனைப்போல்வான்.

     (இ-ள்.)தெருள் இலா-தெளிந்த அறிவில்லாமல் (தன்னையெதிர்த்துப்)
பொருத, மதனை- மன்மதனை,முன்னம் - முன்னொருகாலத்திலே,
எரித்திடும் - (உடம்பை) எரித்த, சிவனை-பரமசிவனை,போல்வான்
ஒப்பவனாகிய[பேராற்றலுடைய]வீமன்,-அருள்இலா அரக்கர் -
கருணையில்லாதஇராக்கதர்கள், அகங்கரித்து -  செருக்குக் கொண்டு, இ
ஆறு அரற்றும்-இந்தவிதமாகப் பிதற்றுகின்ற, இந்த பொருள் இலா
உரைகட்கு எல்லாம் - பயனில்லாத இப்பேச்சுகளுக்கெல்லாம், உத்தரம்
புகலான் ஆகி - விடைகூறாதவனாய்,இருள் இலா முத்தம் அன்ன அரும்பு
எயிறு இலங்க - கருநிறமில்லாத [மிக்கவெள்ளொளியையுடைய]
முத்துக்களையொத்தமுல்லையரும்புபோன்ற (தனது) பற்கள் சிறிது
வெளிவிளங்கும்படி, நக்கான் - சிரித்தான்;(எ-று.)

    இருளில் ஆம் முத்தம் - இருளில் விளங்குதலைக்கொண்ட
முத்தமுமாம்.  அழித்தற்றொழிலுடைமையாலும், சிரித்துப்பகை
வரையழித்தலாலும், சிவனை ஈண்டு உவமைகூறியது.  இங்கே, சிரிப்பு -
வீரத்துஎழுந்த வெகுளிநகை.  சிவபிரானது திவ்வியசக்தியை
இத்தன்மையதென உணராது மற்றவர்களைப்போலவே அப்பிரானையும்
வசப்படுத்தலாமெனக் கருதின அவிவேகத்தைப் பற்றி, 'தெருளிலாமதன்'
என்றது.  மானுடனான வீமனை அலட்சியப்படுத்தி அவ்வரக்கர் கூறியபடி
நிகழாமல் வீமனே அவர்களை வெல்லுதலால் அவருரை பொருளிலாவுரை
யாகும்.                                                 (430)