103.- தெறித்த நாணொலியால் விளைந்தமை. அன்னநாணோதையெங்கமண்டமும்பொதுளத்தாக்க மன்னுநாகங்களெட்டுமதம்புலர்ந்துயங்கிவீழத் துன்னும்வாய்நஞ்சுகக்கிக்சுழன்றுமண்சுமக்குங்கொற்றம் பன்னகாதிபனுமுள்ளம்பதைத்துவெம்படங்கள்சோர்ந்தால். |
(இ-ள்.) அன்ன நாண் ஓதை - அந்த வில்நாணியின் ஓசையானது எங்குஉம்-எல்லாவிடத்திலும், அண்டம்உம் - எல்லவண்டங்களிலும், பொதுள - நெருங்கும்படி, தாக்க-(போய்ப்பாவி) மோத, (அவ்வதிர்ச்சி யாற்பயந்து), மன்னும் நாகங்கள் எட்டுஉம்-(எட்டுத்திக்குக்களிலும்) நிலை பெற்ற எட்டுயானைகளும், மதம் புலர்ந்து - மதநீர்வறண்டு, உயங்கி வீழ - மயங்கிச்சோர்ந்தவிழ, மண் சுமக்கும் கொற்றம் பன்னக அதிபன்உம் - பூமியைக்சுமக்கின்ற வெற்றியையுடைய நாகங்களுக்கரசனான ஆதிசேஷனும், உள்ளம் பதைத்து-மனம்நடுங்கி, தன்னும் வாய் நஞ்சு கக்கி-நெருங்கின வாய்களினின்று விஷத்தை வெளியிட்டு, சுழன்று-தலைசுழன்று, வெம்படங்கள் சோர்ந்தான்-பயங்கரமான படங்கள் சாய்ந்து விழுந்தான்; (எ-று.) நாணோதை அண்டமெங்குந் தாக்க, நாகங்கள்வீழ,பன்னகாதிபனுக்கு சோர்ந்தானென்க. நாகங்கள் எட்டு-கிழக்கு ஆதி முறையே ஐராவதம், புண்டரிகம், வாமகம், குமுதம், அஞ்சநம், புஷ்பந்தம், சார்வபௌமம், சுப்பீரதீபம் என்பன. நகம்-அசையாதது: மலை; அதில் வாழ்வது; நாகம்: யானை; தத்திதாந்தவடசொல். பன்னகாதிபன் படங்கள் சோர்ந்தான். உயர்திணைதொடர்ந்த அஃறிணைச்சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடியையே பெற்ற திணைவழுவமைதி; (நன்-பொது-27.) அகண்டமும் பொதுள என்றும் பாடம். (440) 104.-வீமனெய்த சரத்தால் அரக்கச்சேனை தளர்ந்தமை. உரம்படச்சரங்கண்மேன்மேலுறுக்கிவெல்வீமனுந்தச் சிரங்களிற்றோளின்மார்பிற்கண்களிற்செருகச்சென்று கரன்படைக்குழாத்துமுன்னங்காகுத்தன்கதிர்கொள்கூர்வாய்ச் சரம்படத்தளர்ந்ததென்னத்தளர்ந்ததத்தளர்வில்சேனை. |
(இ-ள்.) வெல் வீமன் - வெற்றியையுடைய வீமசேனன், உறுக்கி - கோபித்து, சரங்கள் - பாணங்களை, உரம் பட - வலிமை பொருந்த, மேல்மேல்-மேலேமேலே, உந்த-பிரயோகிக்க, (அவ்வம்புகள்), சிரங்களில் - (அரக்கர்களுடைய) தலைகளிலும், தோளில்-தோள்களிலும், மார்பில் - மார்புகளிலும், கண்களில். கண்களிலும், சென்று செருக - போய்த்தைத்தலால், அ தளர்வு இல் சேனை - (இதுவரையிலுந்) தளர்ச்சியில்லாதிருந்த அந்த இராக்கதசேனையானது, கரன் படை குழாத்து - கரனுடைய சேனைக்கூட்டத்திலே, முன்னம்-முற்காலத்தில், காகுத்தன்-ஸ்ரீராமபிரானது, கதிர்கொள் கூர் வாய் சரம்-ஒளியைக்கொண்ட கூர்மையான நுனியையுடைய அம்புகள், பட-படுதலால், தளர்ந்தது என்ன-(அச்சேனை) தளர்ச்சிபெற்றது போல, தளர்ந்தது-(தான்) தளர்ச்சிபெற்றது; (எ-று.) |