106. | அப்படைத்தொகைகளெல்லாம்மறுத்தறுத்தவர்கடத்த மெய்ப்படச்சரங்கள்சிந்திச்சிரங்கள்வெவ்வேறதாக்கி யிப்படிக்கரக்கர்சேனையாவையுந்துணித்துமீண்டுஞ் செப்படிப்பவரினின்றுசிரித்தனன்சிங்கம்போல்வான். | (இ-ள்.) சிங்கம் போல்வான்-சிங்கத்தையொப்பவனாகிய வீமசேனன், அ படை தொகைகள் எல்லாம்-அந்த ஆயுதங்களின் கூட்டங்களை யெல்லாம், அறுத்து அறுத்து - துண்டுதுண்டாக்கி, அவர்கள் தத்தம் மெய்பட - அவ்வவ்வரக்கர்களது உடம்புகளிற் படும்படி, சரங்கள் சிந்தி-பாணங்களைப் பிரயோகித்து, சிரங்கள் வெவ்வேறாது ஆக்கி - (அவர்கள்) தலைகளை (அவர்களின் உடம்புகளின்று) வேறுவேறாகச்செய்து, இப்படிக்கு அரக்கர் சேனை யாவைஉம் மீண்டுஉம் துணித்து - இவ்விதமாக இராக்கதர்சேனைகளையெல்லாம் மறுபடியும் அழித்து, செப்படிப்பவரின் நின்று-செப்படிவித்தை செய்பவர்போல (ச் சிறிதும் சிரமமில்லாமல் இவ்வளவு தொழிலையுஞ் செய்து) நின்று, சிரித்தனன்-சித்தான்; (எ-று.) இங்குக் கூறிய உவமையால் வீமனுக்கு அரக்கரைவென்றமை ஒரு வினோதமாக இருந்ததன்றிச் சிறிதும் சிரமமின்மை வெளியாம். இந்த நகை, வீராட்டகாசமெனப்படும். வேறு+வேறு=வெவ்வேறு; இது, மருஉவில் அடங்கும். செப்படிவித்தை-மாயவித்தை: ஜாலம்:கண்கட்டிவிததை; செப்பிடுவித்தை யென்றும் வழங்கும். வெவ்வேறவாக்கிஎன்றிருப்பின்நலம். (443) வேறு 107.-அரக்கர் சேனை யொழியவே, பொழிற்காவலர் குபேரனுக்கு நிகழ்ந்தமை மொழிதல். அந்தவ யப்படை யவ்வா றாதல் கண்டு கந்தம லர்ப்பொழில் காக்குங் காவ லாளர் புந்திம யக்குற நொந்து புகுந்த வெல்லா முந்தியி யக்கர்பி ரானுக் கோடி மொழிந்தார். |
(இ-ள்.) வய-வலிமையுடைய, அந்த படை அந்த இராக்கத சேனையும், அ ஆறு ஆதல்-அப்படியாயி எதை (எளிதில் அழிக்கப் பட்டதை), கண்டு - பார்த்து, கந்தம் மலர் பொழில் காக்கும் காவலாளர்-வாசனையையுடைய பூக்களையுடைய அச்சோலையைப் பாதுகாக்கின்ற காவற்காரர்கள்,-புத்தி மயக்கு உற - (தங்கள்) அறிவுமயக்கத்தை யடைய, நொந்து-வருந்தி, முந்தி ஓடி-விரைந்துசென்று, இயக்கர் பிரானுக்கு-யக்ஷர்களுக்கரசனான குபேரனுக்கு, புகுந்த எல்லாம் மொழிந்தார்-நடந்த செய்திகளையெல்லாங் கூறினார்கள்; (எ-று.) முந்தி ஓடி-ஒருவரினும் ஒருவர் முற்பட்டுச்சென்று. மயக்கு-முதனிலை திரிந்த தொழிற்பெயர். இதுமுதற் பதினெட்டுக்கவிகள்-பெரும்பாலும் முதலிரண்டுசீர்கள் விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களு மாகிய நெடிலடி நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். (444) |