பயங்கரத் தன்மையையஅங்கிகால்செங்கண்ணானென்றுவருணித்தார். சிந்தையன், கண்ணான்- குறிப்புவினைமுற்றெச்சங்கள். (446) 110.-வந்தமனிதனைப்பிடித்துக்கொணருமாறு குபேரன் சங்கோடணனென்பானுக்குக் கூறல். தன்றுணைநின்றசங்கோடணனைநோக்கி வன்றிறல்கூரடல் வேகமனிதன்றன்னைச் சென்றவனாவிசெகுத்தல்செய்யாதின்னே துன்றுபுயங்கடு வக்கியெய்தச்சொன்னான். |
(இ-ள்.)(குபேரன்),-தன்துணைநின்ற சங்கோடணனைநோக்கி - தனக்கு அருகில் நின்ற சங்கோடணனென்னுஞ் சேனைத்தலைவனைப் பார்த்து, சென்று - போய், வன் திறல் கூர் அடல்வேகம் மனிதன் தன்னை - மிகுந்த பலம்பொருந்தின கொடிய வேகத்தையுடைய மனிதனை, அவன்ஆவி செகுத்தல் செய்யாது-அவனுடைய உயிரை அழித்தல் செய்யாமல், இன்னே - இப்பொழுதே, துன்று புயங்கள் துவக்கி - வலிமைமிக்க தோள்களைக்கட்டி, எய்த-கொண்டுவரும்படி, சொன்னான்- கட்டளையிட்டான்;(எ-று.)-தன்துணைநின்ற - தனக்குத் துணையாய்நின்ற என்றுமாம். (447) 111.-சங்கோடணன்சேனையுடன்சோலையடைதல். அந்தவியக்கர்பி ரானுமக்கணத்தில் வந்துநிதிக்கிழ வன்றன்பாதமன்னித் துந்துபிகொட்டவ ளப்பில்சேனைசூழ உந்தியிமைப்பின்ம லர்த்தண்சோலையுற்றான். |
(இ-ள்.) அந்தஇயக்கர் பிரான்உம்-யக்ஷசேனைக்குத்தலைவனான அச் சங்கோடணனும், அ கணத்தில்-அந்தக்ஷணத்திலேயே, வந்து- கிட்டவந்து, நிதிக் கிழவன் தன்பாதம் மன்னி-நிதிகளுக்கு உரிய தலைவனானகுபேரனது திருவடிகளைஅடைந்து [தெண்டனிட்டு],துந்துபி கொட்ட-(போருக்குரிய) துந்துபிவாத்தியங்கள் அடிக்கப்படவும், அளப்பு இல் சேனைசூழ-அளவில்லாத சேனைகள்(தன்னைச்)சூழ்ந்து வரவும், உந்தி- (அச்சேனைகளைச்)செலுத்திக் கொண்டு, இமைப்பின்-ஒரு மாத்திரைப் பொழுதினுள்ளே, மலர் தண் சோலைஉற்றான்-குளிர்ந்தஅந்தப் பூஞ்சோலையையடைந்தான்;(எ-று.)-துந்துபிகொட்ட-பேரிகைமுழங்க. (448) 112.-இயக்கர்தலைவர்வீமனைவளைந்துகொள்ளல். மன்னுகு ருக்கள்கு லத்துமன்னர்மன்னன் தன்னையியக்கர்கு லத்திலெண்ணுந்தலைவர் துன்னுப டைக்கட லோடும்பொங்கிச்சூழ்ந்தார் மின்னிமு ழக்கியி டிக்குமேகம்போல்வார். |
(இ-ள்.)மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார்-மின்னு தலைச்செய்துஆரவாரித்து இடியிடிக்கின்ற மேகங்களைத்தனித் |