வெற்றியுருத்திர சேனன்மீண்டுவந்தாங்கு உற்றதுதாதை தனக்குரைந்திருந்தான். |
(இ - ள்.)அவன்-அவ்வீமன், அ உரை கூற-அந்தவார்த்தைகளைச் சொல்ல, வெற்றி உருத்திரசேனன்-சயத்தையுடைய ருத்திரசேனன், மகிழ்வொடு - மகிழ்ச்சியுடனே, அம் தண் பொன் தரு-அழகிய குளிர்ந்த பொன்போலருமையான மலர்களை,நண்பின்-சினேக வகையால், வழங்கி - (அவ்வீமனுக்குக்) கொடுத்து, போகு என்று அருளி -'நீபோவாய்'என்று அன்போடு சொல்லி, மீண்டு வந்து - திரும்பிவந்து, ஆங்கு உற்றது - அங்கு நடந்தசெய்தியை, தாதை தனக்கு - (தன்) தந்தையான குபேரனுக்கு, உரைத்து - சொல்லி, இருந்தான் - வீற்றிருந்தான்; (எ - று.) தரு -நீர்க்கொடி மலர்க்கு ஆகுபெயர். ஒருசாரார் இக்கவியிலும் அடுத்த கவியிலும் 'தரு'என்றதனால்,வீமன் விரும்பிவந்த மலர் கோட்டுப்பூஎன விளங்கும் என்ப. பொற்றரு நண்பின்வழங்கி என்றதனால், வனசமலரை யீந்தா னென்பது தானே பெறப்படு மென்பாரும் உண்டு. பல அரக்கரும் சில இயக்கரும்போல உருத்திரசேனன் வீமசேனனோடு போர்செய்து தோல்வியடையாமையின், அவனைவெற்றியுருத்திர சேனனென்றார். (461) வேறு. 125.-தான் வேண்டியமலரைப் பெற்றபின், வீமன் அங்குள்ளபொய்கையில் நீராடி இளைப்பாறுதல். அண்ணற்றருப்பெற்ற பின்னந்த வயமீளி யக்காவினில்[குடித்து தண்ணித்திலப்பொய்கை படிவுற்றின் னமுதன்ன தண்ணீர் எண்ணற்றகழுதாட லதுகண்டி ருந்தங்கி ளைப்பாறினான் மண்ணுக்கும்விண்ணுக்கும் மறலிக்கு முறவான வடிவாளினான். |
(இ - ள்.)மண்ணுக்கும்உம்-பூலோகத்துக்கும், விண்ணுக்கும்உம்- தேவலோகத்துக்கும், மறலிக்குஉம் - யமனுக்கும், உறவு ஆன - (துணையாய்)உதவுவதான, வடி வாளினான்-கூர்மையான வாளாயுதத்தையுடையவனான,அந்த வயம் மீளி - வெற்றியையுடைய வீரனானஅவ்வீமன், அண்ணல் தரு பெற்ற பின்-பெருமையையுடைய அப்பூவைப் பெற்றபின்பு, அ காவினில் தண் நித்திலம் பொய்கை படிவுற்று - அந்தச் சோலையிலுள்ளகுளிர்ந்த முத்துப்போலத் தொளிவான நீரையுடைய நீர்நிலையிலேநீராடி, இன் அமுது அன்ன தண் நீர் குடித்து - இனிமையான தேவாமிருதத்தை யொத்த [நற்சுவையுள்ள]குளிர்ந்த (அப்பொய்கையின்) நீரைப் பருகி, எண் அற்ற கழுது ஆடல் அதுகண்டு - அளவிறந்த பேய்கள் (அப் போர்க்களத்திற்) கூத்தாடுதலைப் பார்த்துக்கொண்டு, அங்கு இருந்து-அச்சோலையில்தங்கி, இளைப்பு ஆறினான்-(போர்செய்த)சிரமம் தணிந்துநின்றான்:(எ-று.)-'கழுகாடல்' என்றும் பாடம். வீமன்வாள்மண்ணுக்கும் விண்ணுக்கும் உறவாதல் - பூலோகத்தவர்க்கும் தேவலோகத்தவர்க்கும் தீங்கிழைக்கின்ற அரக்கர் |