பக்கம் எண் :

308பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) இந்தநீள் வனத்தில்-இப்பெரிய காட்டிலே, மன்னவர் -
இராசகுலத்தாராகிய பாண்டவர்கள், இ ஆறு - இந்தப்படி, இன்பம்
உற்றுஇருந்த-இன்பமடைந்திருந்த, அ நாளில்-அந்தக் காலத்தில், அந்த
மாவனத்தின் சூழலில் பயிலும் அரு தவம் முனிவரர் பலர்உம்-அந்தப்
பெரிய காட்டினிடத்திற் பொருந்திவசிக்கிற (பிறராற்) செய்தற்கரிய தவத்தைச்
செய்யுந் தன்மையுள்ள பல இருடிச் சிரேஷ்டர்களும்,-தந்திபேர் உழுவை
ஆளி எண்கு இவற்றால்தாம் இடர் உழந்து-யானைகள்பெரும்புலிகள்
சிங்கங்கள் கரடிகள் என்கிற இக்கொடுவிலங்குகளால் தாம் துன்பத்தை
யனுபவித்து, மெய்தளர்ந்து-உடம்புதளர்ச்சியையடைந்து, வந்து-,மா
மகிபர்க்கு அபயம் என்று - பெருமையையுடைய பாண்டவராசர்களுக்கு(த்
தாம்) அடைக்கலப் பொருளென்றுகூறி, அவர் வாழ் வனத்திடைபுகுந்து
மன்னினர்-அப்பாண்டவர் வசிக்கிற காட்டினிடத்துச் சேர்ந்து தங்கினார்கள்;
(எ-று.)-ஆல்-ஈற்றசை. (478)

     தந்தி -தந்தமுடையது.  மகிபர்=மஹீபர் -பூமியைக் காப்பவரென்று
பொருள்: மஹீ-பூமி.                                      (478)

3.-முனிவர்வேண்டியவாறு தருமன் அபயமளித்தல்.

அருந்தவமுனிவரெனைப்பலரிவ்வாறபயமென்றழுங்கு
                                   சொற்கேட்டுப்,
பெருந்திறலரசனவர்பதம்வணங்கிப்பேசுகநுங்குறையென்னப்,
பொருந்தியகொடியவிலங்கினாற்றமக்குப்
                        புகுந்துளயாவையும்புகன்றே,
வருந்தியதுயரந்தவிர்த்திநீயென்றார்மன்னனுமக்குறை
                                      நேர்ந்தான்.

     (இ-ள்.) அருதவம் முனிவர் எனைபலர்-அருமையான
தவத்தையுடைய மிகப்பல முனிவர்கள், இ ஆறு -இந்தப்படி, அபயம்
என்று-அடைக்கலமென்றுகூறி, அழுங்கு - வருந்துகிற, சொல் - சொல்லை,
கேட்டு-,பெரு திறல் அரசன்-மிக்க வல்லமையுடைய தருமராசன், அவர்
பதம் வணங்கி-அவர்களுடைய திருவடிகளைநமஸ்கரித்து, நும் குறை
பேசுக என்ன-உங்கள் குறையைச் சொல்லுங்களென்று சொல்ல,-
(அம்முனிவர்கள்), பொருந்திய கொடிய விலங்கினால்தமக்கு புகுந்துஉள
யாவைஉம் புகன்று - நிலைபெற்றகொடுந்தன்மையுள்ள மிருகங்களினால்
தங்களுக்கு நேர்ந்துள்ள தீங்குகளெல்லாவற்றையுங் கூறி, வருந்திய துயரம்
தவிர்த்தி நீ என்றார்-(நாங்கள்)வருத்தமடைகிற துன்பத்தை நீ
ஒழித்திடுவாயென்று சொன்னார்கள்:மன்னன்உம் அ குறை நேர்ந்தான் -
தருமராசனும் அந்த அவர்கள் குறையைத் தீர்ப்பதற்கு உடன்பட்டான்;
(எ-று.)-எனை-எத்தனையென்பதன் மரூஉ.                    (479)

4.-முனிவரிடுக்கணைத்தீர்க்குமாறுஏவிவீமனையனுப்பி
விட்டுத் தருமன்இருக்க, ஓரிராக்கதன் வந்து
வஞ்சனைச்செயல்புரிதல்.

மறத்துடன்றொழுதுவணங்கிமுன்னின்ற வாயுவின்மதலையை
                                       நோக்கித்,
திறத்தகுமுனிவரிடுக்கணீயையசென்றுதீர்த்திடுகவென்