பக்கம் எண் :

310பாரதம்ஆரணிய பருவம்

மேற்கவியில் வரும் 'சடாசுரனெனும்பெயர்ச்சழக்கன்' என்பதற்கு விசேஷணம்.

     இரண்டாமடியும்,மூன்றாமடியும்,இல்பொருளுவமை. முதலடி - அவனது
உடல்வலிமை மிகுதியை விளக்கும்.  சரிப்ப-சரிப்பது: தொகுத்தல். 'சுரும்பினை'
என்றும், 'இரண்டண்டஞ்சுரும்பென விரும்பினன்'என்றும், 'வானிலா' என்றும்
பாடம்.  சுரும்பு-மலை.                                        (481)

6.முருக்கினாண்மலருங்கறுத்திடச்சிவக்குமொய்யழல்பெய்
                              செழுங்கண்ணன்,
அரக்கினாலுருக்கிக்கம்பிசெய்தென்னவவிர் பொலங்
                             குஞ்சியன்வஞ்சத்,
திருக்கினாலறங்கள்யாவையுஞ்செகுக்குந்
                        தீயவன்றீமையேபுரிந்து,
தருக்கினாலமரர்யாரையுஞ்செகுக்குஞ்
                சடாசுரனெனும் பெயர்ச்சழக்கன்.

     (இ-ள்.)முருக்கின் நாள் மலர்உம்-பலாசமரத்தினது புதிய [அன்று
மலர்ந்த](மிகச்சிவந்த) பூவும், கறுத்திட-கரியதென்னும்படி, சிவக்கும் -
மிகச்சிவந்த நிறமுள்ள, மொய் அழல் பெய் செழுகண்ணன் - நெருங்கின
தீயையுமிழ்கிற பெருங்கண்களையுடையவனும், அரக்கினால்உருக்கி கம்பி
செய்து என்ன - அரக்கை உருக வைத்து அதனாற்கம்பிகள் செய்தாற்போல,
அவிர் - விளங்குகிற, பொலம் குஞ்சியன் - பொன்னிறமான
செம்பட்டமயிர்முடியுடையவனும், வஞ்சம் திருக்கினால்-வஞ்சனையின்
மாறுபாடுகளால், அறங்கள் யாவைஉம் செகுக்கும் - தருமங்களெல்லாவற்றையும்
அழிக்கின்ற, தீயவன்-கொடுங்குணமுடையவனும் ஆகிய, தீமைஏ புரிந்து
தருக்கினால்அமரர் யாரைஉம் செகுக்கும் - தீங்குகளையேசெய்து
அகங்காரத்தால் தேவர்களெல்லோரையும் அழிக்கின்ற, சடாசுரன் எனும் பெயர்
சழக்கன் - சடாசுரனென்னும் பெயரையுடைய மூர்க்கன்,-(எ-று.)-'எய்தி,
கொண்டு, பறந்தனன்' என மேற்கவியில் முடியும்.

     முருக்கினாண்மலரும் கறுத்திடச்சிவக்குங்கண் - கருமையோடு
செம்மைக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு
முருக்கமலரின் செந்நிறத்தோடு அரக்கன்கண்ணின் செந்நிறத்துக்கு
உள்ளதென்பது கருத்து.  இரண்டாமடி-தற்குறிப்பேற்றம்.  சழக்கன்-
வழக்குக்கு மாறுபாடாக நடப்பவன்.                       (482)

7.-சடாசுரன்திரௌபதியை வானத்துத்
தூக்கிக்கொண்டுபோதல்.

அந்தணர்வடிவங்கொண்டிலங்கையில்வா ழாதிவாளரக்கனைப்
                                         போலச்,
செந்தழளித்தமடமயிலிருந்த சிற்பவண்சாலையினெய்திக்,
கொந்தவிழலங்கற்கொற்றவரறியா வகையொருகோண்
                                    மறைபிதற்றிப்,
பைந்ததொடிதனைக்கொண்டந்தரந்தன்னிற் பறந்தனன்
                                  பழியுண ராதான்.

     (இ-ள்.) பழிஉணராதான் - பழியின் கொடுமையை அறியாதவனாகிய
அவ்வரக்கன்,-இலங்கையில்வாழ் ஆதி வாள் அரக்