கனைப்போல- இலங்கா நகரத்திலே வாழ்ந்த பழமையான கொடிய இராக்கதனாகியஇராவணன் (துறவிவேடம் பூண்டு இராமனது பர்ணசாலையையடைந்து சீதையை எடுத்துச்சென்றது) போல, அந்தணர் வடிவம் கொண்டு - அந்தண வுருவத்தைத் தரித்து, செம் தழல் அளித்த மட மயில் இருந்த சிற்பம் வண் சாலையின்எய்தி - செந்நிறமுடைய அக்கினி பகவானாற்பெறப்பட்ட இளையமயில்போலுஞ் சாயலையுடைய திரௌபதி வசித்திருந்த கைத்தொழிலமைந்த அழகிய பர்ணசாலையி லடைந்து, கொந்துஅவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி - பூங்கொத்துக்கள் மலரப்பெற்ற மாலையையுடைய(அங்குள்ள தருமன் நகுல சகதேவர் என்னும்) அரசர் (தன்னைக்)காணவொண்ணாதபடி வஞ்சனைக்குரியதொருமந்திரத்தை உச்சரித்துவிட்டு, பைந்தொடிதனை கொண்டு அந்தரம்தன்னில் பறந்தனன் - பசுமையான தொடியென்னும் வளையலையணிந்ததிரௌபதியை யெடுத்துக்கொண்டு ஆகாயமார்க்கத்திலே பறந்துசென்றான்;(எ-று.) திரௌபதிக்குத் தன்பால் முதலிற் சங்கையுண்டாகாமைப் பொருட்டு, பெற்றம் புலித்தோல் போர்த்துப் பயிர்மேய்தல்போல அரக்கன் அந்தணவடிவங் கொண்டா னென்க. பழியுணராதான் பைந்தொடிதனைக் கொண்டு பறந்தனன் - பிறனில்விழைதலால் தனக்குப் பெரும்பழி நேர்வதன்றித் தன் விருப்பம் முற்றுப்பெறாதென்பதையறியாதவனாய்ப் பாஞ்சாலியைத் தூக்கிக்கொண்டோடின னென்க. தான் கவர்வது தருமனாதியர்க்குத்தெரிந்தால் தடுத்திடுவாரென்று அவர்கள் தான் வருவதைக் காணாதவாறுமறையை யுச்சரித்தான். கொடுஞ்செயலுக்கு உபயோகித்தது பற்றி 'பிதற்றி'என்றார். அந்தணர் என்பதற்குப் பிராமணர் என்று பொருள் கொள்ளாமல், "அந்தணரென்போரறவோர்"என்றபடி முற்றத்துறந்த முனிவருக்குச் சிறப்புப்பெயரென்றலும் ஒன்று. கொத்து- கொத்து: மெலித்தல். பைந்தொடி-அன்மொழித்தொகை. (483) 8.-நகுலசகதேவர்வில்லேந்தி அந்தச்சடாசுரனது இருபுறத்தும் நெருங்கிநிற்றல். அபயமென்றவளந்தரத்தின்மீதரற்று மவ்வுரைகேட்டுமாத்திரி தன், உபயமைந்தரும்வார்சிலைகரத்தேந்தியுருத்தெழுந்துருமென வோடி, இபநடுங்கிடமுன்வளைத்திடுங்கொற்றத்தியாளிபோலிருபுறஞ் சூழ்ந்து, நபமுகிலென்னமின்னொடும்பெயர்வான்றனக்கெதிர்நின் றிவைநவில்வார். |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ-ள்.)(அப்பொழுது), அவள் - அத்திரௌபதி, அந்தரத்தின்மீது- ஆகாய வெளியிலிருந்து, அபயம் என்று அரற்றும் - (தனக்கு) அபயமளித்தல் வேண்டுமென்று புலம்பிக்கூவுகிற, அ உரை - அந்த வார்த்தையை, கேட்டு-செவியுற்று, மாத்திரி தன் |