பக்கம் எண் :

சடாசுரன்வதைச்சருக்கம்321

காளவிடம் -காலகூடவிஷம்: பிரளயகாலத்து நஞ்சுமாம்.  அமுதளிக்கும்
என்று பிரதிபேதம்.

     இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் காய்ச்சீரு மாகிய அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள்.                                          (497)

22.-வீமன்திரௌபதிமுதலியவரோடு
தாம் இருந்தவனத்தையடைதல்.

அடாதுசெய்சடாசுரன தாவியையுமம்பொற்
படாமுலைகடாமுடையபைந்தொடியையும்போய்த்
தடாவமர்விடாதுடைய தம்பியரையுங்கொண்டு
இடாவிறல்கொண் மாருதியிருக்கும்வனமுற்றான்.

      (இ-ள்.)விறல்கொள் மாருதி - வெற்றியைக்கொண்ட வீமசேனன்,-
அடாது செய்சடாசுரனது ஆவியைஉம் - (பிறர்மனைவிழைதலாகிய) தகாத
காரியத்தைச் செய்த சடாசுரனது உயிரையும், அம் பொன் படாம் முலைகள்
தாம் உடைய பைந்தொடியைஉம் - அழகிய பொன்னாபரணங்களையும்
கச்சையு மணிந்த தனங்களையும்பசும்பொற்றொடியையுமுடைய
பாஞ்சாலியையும், போய்தடா அமர் விடாது உடைய தம்பியரைஉம் -
(சடாசுரனைஎதிர்த்துச்)சென்று தடுத்துப் போர்செய்தலைநீங்காமலுடைய
தம்பிமாரான நகுலசகதேவரையும், கொண்டிடா - கைக்கொண்டு, இருக்கும்
வனம் உற்றான்-(தாம்)வசிக்கிற காட்டை அடைந்தான்;(எ-று.)

     சடாசுரனைக்கொன்றுமனைவியோடுந்தம்பியரோடும் மீண்டு
வந்தனனென்பதாம்.  அடாது - எதிர்மறையொன்றன்பால்
வினையாலணையும்பெயர். அடாது என்பதைச் சாதியொருமையாக்
கொண்டு, எல்லாத்தீச்செயல்களையும்அடக்கலாம்.  பொன் -
பொன்னாபரணங்களுக்குக்கருவியாகுபெயர்.  படாம்-படமென்பதன் திரிபு.
அம் பொன் படா முலைஎன எடுத்து, அழகிய பொன்
போல்நிறத்தையுடைய சுணங்கையுடைய சாயத தனங்க ளென்று
முரைக்கலாம்; இவ்வுரைக்கு, பொன் - உவமையாகுபெயர்.  தடா,
கொண்டிடா - உடன்பாட்டு வினையெச்சங்கள். தடா அமர் என எடுத்து -
பிறரால் தடுக்கவொண்ணாதபோ  ரென்றுங் கொள்ளலாம்.  இச்செய்யுளில்
டகர ஆகாரம் அடுத்தடுத்து வந்தது, பிராசமென்னுஞ் சொல்லணி. (498)

23.-வீமன்தருமபுத்திரனிடம் நிகழ்ந்தன கூறினபின்
தருமபுத்திரன்எல்லாருடனும் பதரிகாச்சிரமத்தை
யடைதல்.

உற்றபடிதம்முனிரு தாடொழுதுரைத்தான்
மற்றவனுமங்குறையு மாமுனிவரோடும்
கொற்றமிகுதம்பிய ரொடுங்குழுமியன்றே
நற்றபதிநாரணன தாச்சிரமநண்ணி.