இரண்டுகவிகள் - குளகம். (இ-ள்.)(வீமன்), தம்முன் இரு தாள் தொழுது - தனது தமையனான யுதிட்டிரனது உபயபாதங்களைவணங்கி, உற்றபடி, உரைத்தான் - நடந்த வரலாற்றைச் சொன்னான்;மற்று - பின்பு, அவன்உம் - அத்தருமபுத்திரனும், அங்கு உறையும் மாமுனிவரோடுஉம் - அவ்விடத்திலே (தன்னோடுகூட) வசிக்கிற சிறந்த முனிவர்களுடனும், கொற்றம் மிகு தம்பியரொடுஉம் - ஜயம் மிகுந்த தம்பிமார்மூவருடனும், குழுமி - கூடி, அன்றே - அப்பொழுதே, நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி - சிறந்தமுனிவரான நாராயணரது பதரிகாச்சிரமத்தை அடைந்து,-(எ-று.)-'வணங்கிப்பெற்றுத் தங்கினர்கள்' என மேற்கவியோடு இயையும். மேலைக்கவியில்'கங்கைவளநாடர்தங்கினர்கள்'என்ற பலர் பால்முடிபுக்கு ஏற்ப, இக்கவியில் நண்ணியென்னும் வினையெச்சத்தை நண்ணவெனத் திரித்தல் நலம். தபதி - தபஸ்வீ: வடமொழித் திரிபு; தவஞ்செய்பவனென்று பொருள். குருசிஷ்யகிரமத்தை உலகத்தவர்க்கு உணர்த்துதற் பொருட்டுத் திருமால் தாம் அநுஷ்டித்துக்காட்டுமாறு நாராயணனென்னுங் குரு நரனென்னுஞ் சிஷ்யனுக்குத் தத்துவோபதேசஞ்செய்யும்பாவனையாய்த்தாமே இரண்டுருவங்கொண்டு பதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கின்றன ரென அறிக. நாரணன் - நாராயணனென்னும் வடமொழித் திரிபு: நார அயந எனப் பிரிக்க: சிருஷ்டிப்பொருள்களுக்கு இருப்பிடமானவனென்றும், சிருஷ்டிப்பொருள்களை இருப்பிடமாகவுடையவ னென்றும், பிரளயசமுத்திரத்தை இருப்பிடமாகக் கொண்டவனென்றும் பொருள். ஆச்சிரமம் - ஆஸ்ரமம்;வடசொல். கொற்றம் - சடாசுரவிசயம். மற்றவனும் என ஒருசொல்லாகஎடுத்து, தமையனானதருமனும் எனலுமாம். (499) 24.-சிலநாள்அங்குத் தங்கிப் பாண்டவர்கள் மலைவழிகளிற்செல்லுதல். அங்கவன்மலர்ப்பதம் வணங்கியருள்பெற்றுக் கங்கைவளநாடர்கலைதேர்முனிவரோடும் தங்கினர்கள்சிற்சில்பக றங்கியபினப்பால் சிங்கமெனவெண்ணில்வரை சேர்நெறிகள்சென்றார். |
(இ-ள்.) கங்கை வளம் நாடர் - கங்காநதிபாயும் பலவளங்களையுமுடையகுருநாட்டுக்கு உரிய பாண்டவர்கள்,-அங்குஅவன் மலர் பதம் வணங்கி - அந்தப்பதரிகாச்சிரமத்தில் அந்த நாராயணனது தாமரைமலர் போலுந் திருவடிகளைநமஸ்கரித்து, அருள் பெற்று - (அவ்வெம்பெருமானது) கருணையைப்பெற்று,கலைதேர் முனிவரோடுஉம் - சாஸ்திரங்களையறிந்தமுனிவர்களுடனே, தங்கினர்கள்-(அங்குத்) தங்கினார்கள்;சில சில பகல் - சிலசிலதினங்கள், தங்கிய பின் - (அங்குத்) தங்கினபின்பு, அப்பால்-அதன்புறத்தில், எண் இல் வரை சேர் நெறிகள்- அளவி |