வேறு. 14.-வீமன்அங்குச் சங்கத்துவானஞ் செய்தல். சீர்த்தாரைக ளுதிரத்திசை மருவுங்கரி சிதறக் கார்த்தாரைகள் கற்றாரைகளுருமேறொடுகக்க வார்த்தாழ்கட லுலையக்கதிர்மணிவெள்வளைவாய்வைத்து ஆர்த்தானுக வந்தத்தெழு மடன்மாருத மனையான். |
(இ-ள்.) உகஅந்தத்து எழும் அடல் மாருதம் அனையான்- யுகாந்தகாலத்திலே வீசுகின்ற வலிய பெருங்காற்றை யொத்த வீமன், சீர் தாரைகள் உதிர - சிறப்பையுடைய நட்சத்திரங்கள் கீழ்ச் சிந்தவும்,-திசை மருவும் கரி சிதற-திக்குக்களிற் பொருந்தின யானைகள்[திக்கஜங்கள்] நிலைபெயரவும்,-கார்தாரைகள் கல் தாரைகள் உரும் ஏறொடுகக்க - மேகவரிசைகள் கல்மழைகளைப்பேரிடிகளுடனே சொரியவும்,-வார்தாழ் கடல் உலைய- நீண்ட ஆழ்ந்த கடல் கலங்கவும், கதிர் மணி வெள் வளை வாய் வைத்து ஆர்த்தான் - ஒளியையுடைய அழகிய வெண்ணிறமான சங்கத்தை (த் தனது) வாயிலேவைத்து ஆரவாரித்தான்;(எ-று.)-தாரை- ஆவீறு ஐயான வடசொல். இதுமுதல் பதினைந்துகவிகள்- பெரும்பாலும் ஈற்றுச்சீரொ ன்று மாச்சீரும், மற்றையமூன்றும் மாங்கனிச்சீர்களு மாகிய அள வடிநான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (516) 15.-அந்தத்தொனிஅளகாபுரியிலுள்ளார் செவியில்விழ அவர்கள் படையுடன்திரண்டு நெருங்குதல். அந்தத்தமரஞ்சென்று யளகாபுரியுறைவோர் சிந்தைத்துயருறமற்றவர் செவியிற்செறிவுறலும் இந்தத்தொனிபுரிவானிவ னெவனோவெனவெவரும் முந்திக்கரிபரிதேரிவை கொண்டேயுடன்மொய்த்தார். | (இ-ள்.) அந்ததமரம் சென்று - அந்தச்சங்கத்தொனி போய், உயர் அளகாபுரி உறைவோர் சிந்தை துயர் உற - சிறந்த அளகை நகரத்தில் வசிப்பவர்களது மனந் துன்பமடையும்படி, அவர் செவியில் செறிவுறலும் - அவர்கள்காதுகளிற் சேர்ந்தவளவில்,-எவர்உம்- (அந்நகரில் வசிப்பவர்) பலரும், இந்த தொனி புரிவான் இவன் எவன்ஓ என - இந்தஓசையைச் செய்பவனாகியஇவன் எவனோவென்றுஐயமுற்று, முந்தி - (ஒருவரினும்ஒருவர்) முற்பட்டு, கரி பரி தேர் இவை கொண்டு - யானை குதிரை தேர் என்னும் இச்சேனைகளைக்கூட்டிக்கொண்டு, உடன் மொய்த்தார் - விரைவாய் நெருங்கினார்கள்;(எ-று.) மற்று - அசை,தொனி-த்வநி;வடசொல். உந்தியெனப் பதம் பிரித்து, செலுத்தி யென்றும் பொருள்கொள்ளலாம். முந்தக்கரிபரி தேரிவை மேல் கொண்டுடன் மொய்த்தார் என்று ஈற்றடியிற் பாடாந்தரம். (517) |