பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்333

16.-அப்போதுஅஞ்சாநெஞ்சுபடைத்த
ஒருவித்தியாதரன்வீமனைக்கண்டு அஞ்சுதல்.

அவ்வேலையினொருவிஞ்சையனஞ்சாவலிநெஞ்சன்
வெவ்வேலையின்மிகவோதைசெய்மீளிக்கெதிர்செல்லாக்
கைவேலினனிவனாமெனக்கண்டான்வெருக்கொண்டான்
வைவேனிருதரின்வஞ்சமு மாமாயையும்வல்லான்.

     (இ-ள்.) அ வேலையின்-அப்பொழுது,அஞ்சா வலி நெஞ்சன்-
(எதற்கும்) அஞ்சாத உறுதியையுடைய மனத்தையுடையவனும், வை வேல்
நிருதரின் வஞ்சம்உம் மாமாயைஉம் வல்லான்-கூர்மையான
வேலாயுதத்தையுடைய அரக்கர்களைக்காட்டிலும்வஞ்சனையிலும்பெரிய
மாயையிலுந் தேர்ந்தவனுமான, ஒருவிஞ்சையன் - ஒரு வித்தியாதரன்,
வெவ் வேலையின்மிக ஓதை செய் மீளிக்கு எதிர் செல்லா-
கொடியகடலோசையைக்காட்டிலும் மிகுதியாகச் சங்கொலியைச் செய்கிற
வீரனானவீமனுக்குஎதிரிற் போய், கண்டான் - (அவனைப்)பார்த்து, கை
வேலினன் இவன் ஆம் என - கையில் வேலாயுதத்தையுடைய
முருகக்கடவுள் போல்வான் இவனென்று எண்ணி, வெரு கொண்டான்-
அச்சங்கொண்டான்;(எ-று.)                                (518)

17.-அவ்விஞ்சையன்முன்பு நம்
சோலையில்வந்தவனிவனென்றுகருதி 'நம்மவர்க்குச்
சொல்வேன்'என்று மீளுதல்.

இம்மானவனெழில்கூர்ரதி பதியைப்பொருமெரிகண்
கைம்மானவனருளுங்களி மயிலோனெனமுதனாள்
மைம்மான்விழிமொழியப்பொழில் வந்தோனெனக்கருதா
விம்மாநமர்க்குரையாடுது மெனவெய்தினின்மீண்டான்.

     (இ-ள்.)'இமானவன்-இந்தமனிதன், எழில் கூர் ரதிபதியை பொரும் -
அழகுமிக்க ரதீதேவிக்குக் கணவனானமன்மதனையழித்திட்ட, எரி கண்
கை மான் அவன் - எரிகிற நெற்றித் தீக்கண்ணையுடையனாகி
இடக்கையில்மானையேந்தியஅச்சிவபிரான், அருளும் - பெற்ற (குமாரனும்),
களி மயிலோன் என - களிப்பையுடைய மயிலை வாகனமாகவுடையனுமான
முருகக்கடவுள்போல,-முதல்நாள் - முன்புஒருநாள், மை மான் விழி
மொழிய-கரிய மான்பார்வைபோலும் பார்வையையுடைய தனதுமனைவி
[திரௌபதி]கூறியதனால்,பொழில் வந்தோன் - இச்சோலையினிடம்வந்த
வீமனாவன்,'என கருதா-என்று நிச்சயித்து,-விம்மா-நடுங்கி, நமர்க்கு
உரையாடுதும் என-நம்மவர்க்குச் சொல்வோம் யா மென்று, வெய்தினில்
மீண்டான்-விரைவாகத் திரும்பிச்சென்றான்,(அவ்வித்தியாதரன்);(எ-று.)

     இவன்முருகக்கடவுளைப்போன்றவன்:மனைவியால்தூண்டப்பட்டு
முன்பு வந்தவன் எனக்கருதி, மணிமானிடம் அவ்வித்தியாதரன் சொல்லச்
சென்றானென்க. ரதிபதி-வடசொல், விகாரப்படாது நின்றது. மைம்மான்விழி -
அன்மொழித்தொகை.                                        (519)