பக்கம் எண் :

334பாரதம்ஆரணிய பருவம்

18.-குபேரனுடையசேனைத்தலைவனான
மணிமானிடத்தில்வீமன் மீண்டும் வந்திருத்தலை
அவ்விஞ்சையன்கூறுதல்.

மேனாளொருமலர்க்காரணம்விறல்வாணிருதரைமேல்
வானாடர்தமுலகத்தடன்மறலிக்கிடுமறவோன்
ஆனாமுனிவினன்மீளவுமணுகுற்றனனென்னச்
சேனாபதிமணிமானுழைவந்தேயுரைசெய்தான்.

     (இ-ள்.) மேல்நாள்-முன்னொருநாளில்,ஒருமலர் காரணம்-ஒரு
பூவின்காரணமாக, விறல் வாள் நிருதரை-வலிமையுடைய
ஆயுதங்களையேந்தினஅரக்கர்களை,மேல் வானாடர்தம்உலகத்து-
மேலுள்ள தேவர்களதுலோகத்தில்[வீரசுவர்க்கத்தில்],(சேரும்படி), அடல்
மறலிக்கு இடும்-கொடுமையையுடைய யமனுக்குப் பலியாகக்கொடுத்த,
மறவோன்-வலிமையையுடைய மனிதன், ஆனாமுனிவினன்-நீங்காத
கோபத்தையுடையவனாய்,மீளஉம் அணுகுற்றனன் - மறுபடியும் வந்து
சேர்ந்தான், என்ன - என்று, சேனாபதிமணிமான் உழை வந்து-
குபேரசேனைக்குத்தலைவனானமணிமானென்பவனிடத்தில் வந்து, உரை
செய்தான் - (அவ்வித்தியாதரன்) கூறினான்;(எ-று.)-ஆனாமை-நீங்காமை;
ஆன்-பகுதி. அணுகுற்றனன், உறு-துணைவினை.            (520)

19.-இதுமுதல்மூன்று கவிகள் - குளகம்:
மணிமான்சினந்துகுபேரனுக்குத் தெரிவியாமலே பொருது
கொல்வேனென்று சேனைகளைஏவுதலைத்தெரிவிக்கும்.

அவன்வந்திதுபகராதமு னதிவேகமொடழலாச்
சிவனண்பனதுயிர்நண்பனும் விழிசெந்தழல்பொழியப்
பவனன்றருசிறுமானுட னவனோபடிமுதலாம்
புவனந்தொழுபெருமானக ரிடைவந்திவைபுரிவான்.

     (இ-ள்.)அவன்-அந்த வித்தியாதரன், வந்து-,இது-இவ்வார்த்தையை,
பகராத முன்-சொல்லுதற்குமுன்னே [சொன்னவுடனேயென்றபடி],சிவன்
நண்பனது உயிர் நண்பன்உம்-சிவனுக்குச் சினேகிதனானகுபேரனது
உயிரோடொத்த நட்பினனாகியஅம்மணிமானும்,-அதிவேகமொடுஅழலா-
மிகுந்தஉக்கிரத்தன்மையோடு கோபித்து, விழி செம் தழல் பொழிய-கண்கள்
சிவந்தநெருப்பைச் சொரிய, 'பவனன்தரு சிறு மானுடன் அவன்ஓ-
வாயுபெற்ற சிறிய மனிதனானஅவனோ,படி முதல் ஆம் புவனம் தொழு
பெருமான் நகரிடை வந்து இவை புரிவான் -பூமிமுதலிய
உலகங்களினுயிர்களெல்லாம் வணங்குகிற பெருமையையுடைய
குபேரனது நகரத்திலே வந்து இச்செயல்களைச்செய்யத்தக்கவன்! (எ-று.)

     குபேரன் முன்னொருகாலத்தில்கைலாசமலையின்ஒரு சாரலிலிருந்து
பெருந்தவஞ்செய்து சிவதரிசனத்தைப் பெற்று அவனருளால் அவனுக்கு
நண்பனாயினான்;இவ்வரலாறு, உத்தரராமாணயத்திலுள்ளது.  சிவன்
நண்பனானகுபேரனது நகரத்தில் ஒரு சிறு