பக்கம் எண் :

338பாரதம்ஆரணிய பருவம்

முதனிலைத்தொழிற்பெயர். இனி, காணார்முனைக்குஎன்றும்வீழ் வந்த
சாயகம் என்பதற்கு-பகைவரோடு பொரும்போர்க்களத்தில் எப்பொழுதும்
ஆலமரத்தின் விழுது அம்மரத்துக்கு உதவுவதுபோலத் தனக்கு
உதவிசெய்யும் அம்பு என்றும் உரைக்கலாம்.  ஸாயகம் - வடசொல்.  (526)

25.-சாலேந்திரனென்றபடைத்தலைவன்
வீமனதுமனவுறுதியறியச் சில கூறலுறல்.

அக்காலையில்விறலோனிலையறிவானுயரறிவால்
தக்கார்புகழ்சாலேந்திரன் றன்சேனையைத்தகையாக்
கைக்கார்முகவயமாருதி திருமுன்கடிதோடிப்
புக்கானொருதேர்மேனனியிவைநின்றுபுகன்றான்.

     (இ-ள்.) அ காலையில்- அந்தச்சமயத்தில், விறலோன் நிலை
அறிவான்-வலிமையையுடைய வீமனது மனவுறுதிநிலையைஅறியும்
பொருட்டு, உயர் அறிவால் தக்கார் புகழ் சாலேந்திரன்-சிறந்த அறிவினால்
தகுந்தபெருமையையுடைய சான்றோராற்புகழப்படுகின்ற
சாலேந்திரனென்பவன், தன் சேனையைதகையா - தனதுசேனையை
(வீமனுடன் போர்செய்யாதபடி) தடுத்து,-ஒருதேர்மேல்-(தனது)
ஒப்பற்றதொரு தேரின்மேலே, கை கார்முகம் வய மாருதி  திருமுன் கடிது
ஓடி புக்கான் - கையில்வில்லையுடையவலியவீமனது எதிரில்
விரைவாகஓடிச்சென்று சேர்ந்து, நின்று - (அங்கு) நின்று, இவை-
இவ்வார்த்தைகளை,நனி புகன்றான்-மிகுதியாகக்கூறினான்;(எ-று.)-
அவற்றைமேற்கவியிற் கூறுகிறார்.

     அறிவால்தக்கார் என இயைத்து-ஞானவ்ருத்தர் என்றாவது,அறிவால்
புகழ் என இயைத்து-அறிவுவிஷயத்திலே புகழப்படுகிற என்றாவது
கருத்துக்கொள்க. திருமுன் - சன்னிதானம்.  வீமனது உயர்வும்
சாலேந்திரனது இழிவும் தோன்ற, வீமனதுமுன்னிடத்தை 'திரு'என்ற
சொல்லால் விசேடித்தார்.                                  (527)

26.-சாலேந்திரன்'உனதுஉயிர்போகும்முன்நீ யார்?
எனக் கூறுக'என்று வீமனைவினாவல்.

சிவனோதிசைமுகனோவதிர்திரையாழியிற்றுயில்கூர்
பவனோபருவரைமார்புறப்பகிருஞ்சுடர்வடிவே
லவனோதிறனரவாகனனளகாபுரிவருவோன்
எவனோவுனதுயிர்சிந்துமுன்யார்நீயுரையென்றான்.

     (இ-ள்.)'சிவனோ-? திசை முகன்ஓ-(நான்குதிக்கையும் நோக்கின)
முகம்நான்கையுடைய பிரமனோ? அதிர் திரை ஆழியில் துயில் கூர்பவன்ஓ
- ஆரவாரிக்கின்ற அலைகளையுடையகடலிலே யோகநித்திரை
செய்தருளுந்திருமாலோ?  பரு வரை மார்பு உற பகிரும் சுடர் வடிவேலவன்
ஓ-பருத்த கிரௌஞ்சகிரியினது நடுவிடத்திற் பொருந்தும்படி பிளந்திட்ட
ஒளியையுடைய கூர்மையான வேலாயுதத்தை