பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்349

சிதறியோடுகிறமானின் கூட்டம்போல, வெருவி-பயந்து, தியங்கா"
அறிவுமயங்கி, உளம் நொந்து-மனம்வருந்தி, இருவர் ஒரு நீள் நெறி
இயங்கலர்-இரண்டுபேர் ஒருபெரிய வழியிலே செல்லாமல் [தனித்தனி
சிதறுண்டு],விரைந்து - துரிதமாக, பொருவு இல் அளகாபுரி புகுந்தனர் -
ஒப்பில்லாத அளகாபட்டணத்தினுட் சென்று சேர்ந்தார்கள்;(எ-று.)-உழுவை-
வீமனுக்கும், மானினம் - விஞ்சையர் குழாத்துக்கும் உவமை.    (548)

47.-உயிரொழிந்தோர் தவிரத் தோற்றோடியவிஞ்சையர்
மணிமானிடம் தம் நிலையைத்தெரிவித்தல்.

இஞ்சிமதில்வாயரணம் யாவுமிகல்புரிவான்
அஞ்சினர்கள்விஞ்சைய ரடைந்தனர்களழகார்
மஞ்சனையமேனிமணிமான்முனமடைந்தே
துஞ்சினரொழிந்தவ ரவற்றொழுதுசொன்னார்.

     (இ - ள்.)இகல் புரிவான் அஞ்சினார்கள்-(மீண்டும்) போர்
செய்தற்குப் பயந்தவர்களும், துஞ்சினர் ஒழிந்தவர்-(போரில்) இறந்தவர்கள்
போக மிகுந்தவர்களுமாகிய, விஞ்சையர்-வித்தியாதரர்கள், இஞ்சி -
மதிலிலும், மதில் வாய் - மதிலிடையிலேயுள்ள கோபுரவாயில்களிலும்,
அரணம் யாஉம் - (மற்றுமுள்ள)காப்பிடங்களெல்லாவற்றிலும்,அடைந்தனர்கள்
- (போய்ப் பதுங்கிச்)சேர்ந்தவர்களாய், (பிறகு), அழகு ஆர் மஞ்சு அனைய
மேனி மணிமான்முனம் அடைந்து - அழகுநிறைந்த மேகத்தை யொத்த
உடம்பையுடையமணிமானென்பவனது எதிரிலே சேர்ந்து, அவன் தொழுது-அவனைநமஸ்கரித்து, சொன்னார்- (தமது நிலைமையைக்)கூறினார்கள்;
(எ-று.)-அரணம்-கோட்டையின் உள்ளிடங்கள்.                  (549)

48.-அதுகேட்டமணிமான் வெகுளுதல்.

அந்நிலையுணர்ந்துமணிமானுமவிர்சோதிப்
பொன்னசலமொத்துயர் புயத்துணைதுடிப்ப
மன்னுபுருவச்சிலைவளைத்துமழைமுகில்போல்
மின்னிலகநக்குருமெ னத்தனிவெகுண்டான்.

     (இ - ள்.) அநிலைஉணர்ந்து-(அவர்களது) அந்த நிலைமையை
அறிந்து, மணிமானும்-, அவிர் சோதி பொன் அசலம் ஒத்து உயர் புயம்
துணைதுடிப்ப-விளங்குகின்ற ஒளியையுடைய பொன்மயமான
மேருமலையைப்போன்று உயர்ந்துள்ள (தனது) இரண்டுதோள்களும்
துடிதுடிக்க, மன்னு புருவம் சிலைவளைத்து-பொருந்தினவிற் போன்ற
(தனது) புருவத்தை (க்கோபத்தால்) வளையநெறிந்து,மழை முகில் போல்-
மழை பெய்யுந் தன்மையுள்ள காளமேகம்போல, மின் இலக நக்கு-
மின்னல்போன்றஒளி வெளிவிளங்கும்படி சிரித்து, உரும் என தனி
வெகுண்டான் - இடிபோல ஒப்பில்லாது கோபங்கொண்டான்;(எ - று.)

     மலைகளுட்சிறந்ததும் பெரியது மாதலால், மேருவை உவமை
கூறினார். மழைமுகில்என்றதற்கேற்ப, சிலையும்மின்னும் உருமும். (550)