பின்மேல் என்றும்,வார்சிலைச்சிறுவனும்இந்திரசித்தும் என்றும் முறைபட நிறுத்திவைத்தது - முறைநிரனிறைப்பொருள்கோள். வித்தியாதரனான மாயையில் வல்ல மணிமானுக்கு அரக்கனானமாயையில்வல்ல இந்திரசித்தையும், தேவாமிசமான மனிதனாகியவீமனுக்குத் தெய்வத்தன்மையுள்ள மனிதனாகிய இலக்குமணனையும்உவமைகூறினார். இலக்குமணன்கையால் இந்திரசித்து ஒழிதல் போல, மேல் வீமன் கையால் மணிமான் ஒழிதலாலும் இவ்வுவமை ஏற்குமாறு காண்க. தான் பிறந்தகாலத்து இடிமுழக்கம்போன்ற பெருங்குரலுடைமையால் மேகநாதனெனப் பெயர்பெற்ற இராவணபுத்திரன், பின்பு இராவணன் திக்விசயஞ் செய்கையில் தேவர்க்கும் அரக்கர்க்கும் நடந்த பெரும்போரில் தனதுதந்தைக்கும் வெல்லுதற்கரியனாயிருந்த இந்திரனைத்தான் சென்று பொருதுவென்று கட்டிக் கொணர்ந்ததனால், அக்காலத்தில் இந்திரனைச்சிறைமீட்டற்குவந்தபிரமதேவர் இவனுக்கு இந்திரசித்தென்ற பெரும்பெயரையும் மற்றும் பலவரங்களையும்அளித்துப் போயின ரென்பது வரலாறு. விஞ்சை-வித்தையையுடைய வித்தியாதரர்க்கு ஆகுபெயர். எறுழ் என்பது - வலிமைப் பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்லாம்: ஆகவே, எறுழ்வலி-ஒருபொருட்பன்மொழி. (561) 60.-நான்குகவிகள்- வீமனும் மணிமானும் பொருகையில் பிரமன்வாளியால்மணிமான் வீழ்தலும் சேனைத் தலைவர்கள்நிலைகெட்டோடலைத்தெரிவிக்கும். அந்தவஞ்சனையெலாமகன்றுபோனபின் விந்தமொத்துயர்ந்ததோள் வீமசேனன்மேல் சந்திரன்மிசைவரு தழலராவெனச் சுந்தரன்வெகுண்டொரு சூலம்வீசினான். |
(இ-ள்.) அந்தவஞ்சனைஎலாம் - அம்மாயைமுழுவதும், அகன்று போன பின் - நீங்கிப்போனபின்பு, சுந்தரன் - அழகியவடிவமுடைய மணிமான்,-விந்தம்ஒத்து உயர்ந்த தோள் வீமசேனன்மேல்-விந்திய மலையைப்போன்றுஓங்கிய தோள்களையுடையவீமன் மீது, சந்திரன் மிசை வரு தழல் அரா என-சந்திரன்மீது (அவனைக்கவர்தற்கு) வருகிற நெருப்புப் போற் கொடிய பாம்புபோல, வெகுண்டு ஒரு சூலம் வீசினான்- கோபித்து ஒரு சூலாயுதத்தை யெறிந்தான்;(எ-று.) சந்திரன் -வீமனுக்கும், ராகுகேது - சூலத்துக்கும் உவமை. சந்திர குலத்தவனானவீமனுக்கு அச்சந்திரனையேஉவமைகூறினார். சந்திரன்மேல் வரும் பாம்பு அச்சந்திரனைஅழிக்கமாட்டாமைபோலச் சூலமும் வீமனை அழிக்கமாட்டாமையின், உவமை ஏற்கும். (562) 61. | சூலமுந்தனதுமேற் சூலமேவினோன் கோலமும்பொடிபடக் கொதித்துமீளியும் மூலபங்கயமறை முனிவன்வாளியை ஆலமுங்குளிர்வுற வழலவீசினான். |
|