பக்கம் எண் :

362பாரதம்ஆரணிய பருவம்

விளங்குகிறமலரென்றுமாம். அம்மா - ஈற்றசை. துனைவரு - வேகத்துடன்
சுழன்றுவருகிற என்றலும் உண்டு. பூமியைச்சூழ்ந்துள்ள
கடலைப்பூமியாகியபெண் உடுக்கும் ஆடையாகக் கூறுதல், கவிமரபு.
உளன்-தன்மையொருமைக்கு வந்தது                       (571)

70.முன்செய்வெவ்வினையாலோமுடிவினல்வினையாலோ
மின்செய்தகழலானவ் விசயனுமகல்வுற்றான்
பொன்செய்தமுடியானும் போயினனினிநானிங்கு
என்செய்வதெனமன்னன் முனியடியிணைவீழ்ந்தான்.

     (இ - ள்.)'முன்செய் வெவ் வினையால்ஓ-முற்பிறப்பில்(யான்)
செய்த கொடிய பாவத்தினாலோ,முடிவு இல் நல் வினையால்ஓ-
எல்லையில்லாதநல்ல புண்ணியத்தினாலோ,மின் செய்த கழலான் அ
விசயன்உம்-மின்னல்போன்றஒளியைச் செய்கிற வீரக்கழலை யுடையவனான
அந்த அருச்சுனனும், அகல்வுற்றான்-(முன்பேஎன்னைவிட்டு)நீங்கினான்;
பொன் செய்த முடியான்உம் - பொன்னாற்செய்தகிரீடத்தை அணிதற்கேற்ற
வீமனும், போயினன் - (இப்பொழுது என்னைவிட்டுப்)போனான்;இனி நான்
இங்கு என் செய்வது - இனிமேல் யான் இவ்விடத்தில் யாதுசெய்யத்
தக்கது?'
என - என்று கூறி, மன்னன் - தருமராசன், முனி அடி இணை
வீழ்ந்தான் - ரோமச முனிவரது உபயபாதங்களில் விழுந்துவணங்கினான்;
(எ- று.)

     நாட்டையிழந்துகாட்டில்வசிக்கிற வீமனை'பொன்செய்தமுடியான்'
என்றது, இப்பொழுது கிரீடந்தரித்து அரசாளுகிற துரியோதனன் முதலிய
நூறுபேரையுங் கொல்லுதற்குஏற்ற ஆற்றலையுடையஇவனே அம் முடிக்கு
உரியவ னென்னுங் கருத்தால்.  ஓகாரங்கள் - ஐயப்பொருளன.
அருச்சுனனது பிரிவு தனக்கு மிக்கமன வருத்தத்துக்குக் காரணமாதலால்
'வெவ்வினையாலோ'என்றும், பாசுபதம் முதலிய பல
அஸ்திரசஸ்திரங்களைப்பரமசிவனிடத்தும்இந்திரனிடத்தும் பெற்று அநேக
அசுரரை யழித்துப் புகழ்பெறுதற்குக் காரணமாதலின் 'நல்வினையாலோ'
என்றும் ஐயமுற்றான். முன்செய் என்ற அடைமொழியை நல்வினையோடும்,
முடிவில்என்ற அடைமொழியை வெவ்வினையோடும்இயைக்கலாம்.
முடிவில்வினை- பயன்கொடுத்தன்றி ஒழிதலில்லாத கருமம்.      (572)

71.-இதுவும்,மேற்கவியும்-ஒருதொடர்:
தருமனுக்கு உரோமசர்உறுதிமொழி கூறுவன.

அஞ்சலையுரவோனுமாருயிரழிவில்லான்
விஞ்சையரொடும்வெம்போர் விளைந்ததங்கொருகோடி
வஞ்சனைமணிமானம்மாருதிவிடுமம்பால்
துஞ்சினனவன்மேலுந் துனிவருமினிமாதோ.

     (இ-ள்.) அஞ்சலை- (நீ) பயப்படாதே;உரவோன்உம் -
வலிமையையுடைய வீமனும், ஆர் உயிர் அழிவு இல்லான் -
அருமையானஉயிர் அழிதலில்லாமலிருக்கிறான்;அங்கு - அவ்விடத்தில்
[அளகாபுரியில்],விஞ்சையரொடுஉம் - வித்தியாதரர்களுடனே, ஒரு