73.-உடனேகடோற்கசன் வந்த 'பணியாது?' என, தருமன் வீமன்நிலையைக்கூறுதல். புந்திசெய்தவன்முன்னம் புதல்வனுமொருதேர்மேல் வந்தனன்விரைவோடும் வணங்கினனிருதாண்மேல் எந்தைசொலடிநாயேன் பணிவிடையெதுவென்றான் தந்தையுநிருதன்றன் றாதைதனிலைசொன்னான். |
(இ-ள்.)புந்தி செய்தவன் முன்னம் - (இங்ஙனம்) நினைத்தல்செய்த தருமனது எதிரில், புதல்வன்உம் - (வீமனது) குமாரனானகடோற்கசனும், ஒரு தேர்மேல் விரைவோடுஉம் வந்தனன் - (தனது) ஒரு தேரின்மேலேறித் துரிதமாகவந்து, இரு தாள்மேல் வணங்கினன் - (தருமனது) உபயபாதங்களின்மேல் விழுந்துநமஸ்கரித்து, 'எந்தை- என்தந்தையே! சொல் - சொல்வாய்;அடி நாயேன் பணி விடை எது-(உனது) அடியவனும் நாய்போற்கடைப்பட்டவனுமான எனக்கு (நீ) நியமிக்குங் கட்டளையாது?' என்றான்-என்று(தருமனைநோக்கிக்) கூறினான்;தந்தைஉம்-(அவனது பெரிய) தாதையான தருமனும், நிருதன்தன் தாதைதன் நிலைசொன்னான்- அரக்கனானஅக்கடோற்கசனதுதந்தையான வீமனது நிலைமையை(அவனுக்கு)க்கூறினான்;(எ - று.) 'புந்திசெய்வதன்முன்னம்'என்ற பாடத்துக்கு-(தன்னைஅவன்) நினைத்தற்குமுன்பேயென்க;மிகவிரைவில் என்றபடியாம். நாயேன்-மிக்க பணிவாற் கூறும் வார்த்தை. (575) 74.-கடோற்கசன்யாவரையும் தேரிலேற்றிக்கொண்டு அளகாபுரிக்குவானமார்க்கமாகச் செல்லுதல். அக்கணமதுகேளா வவரனைவரையுங்கொண்டு இக்கணமிடையூறாமெழுமெழுமெழுமென்னா முக்கணனுயிர்நண்பன் வாழ்தருமூதூர்வாய் திக்குறநெடுவானிற் சென்றனனொருதேர்மேல். |
(இ- ள்.) அது கேளா - அந்தத்தருமன்வார்த்தையைக்கேட்டு, 'இடையூறுஆம்-(என் தந்தைக்குத்) துன்பம் உண்டாகக்கூடும்;இ கணம் - இப்பொழுதே, எழும் எழும் எழும் - மிகவிரைவாகப் புறப்படுங்கள்', என்னா-என்றுகூறி,அவர் அனைவரைஉம்-(தருமன்முதலிய) அவர்களெல்லோரையும், ஒரு தேர்மேல் கொண்டு - ஒப்பற்ற (தனது) தேரின்மேல் ஏற்றிக்கொண்டு, முக்கணன் உயிர் நண்பன் வாழ்தரு முது ஊர் வாய் திக்கு உற - மூன்றுதிருக்கண்களையுடையசிவபெருமானது பிராணசிநேகிதனானகுபேரன் வாழ்கிற பழமையான அளகாபுரி பொருந்திய வடதிசையிற் சேரும்படி, நெடு வானில்-பெரிய ஆகாயமார்க்கத்திலே, அ கணம் - அப்பொழுதே, சென்றனன் - போனான்;(எ - று.) இக்கணம்என்பதை இடையூறாம்என்பதனோடும்இயைக்கலாம். எழும் என்ற முற்று முக்கால்அடுக்கினது, விரைவுபற்றி. சூரி |