பக்கம் எண் :

366பாரதம்ஆரணிய பருவம்

77.-தருமன்வீமன்மீதுசினந்துகூறிக்
கொண்டிருக்கும்போதுஅங்குநிகழ்ந்ததைக்
குபேரனிடஞ்சொல்லஒருதூதுவன் செல்லல்.

பொற்றொடிமொழியாலிப்போதொருபொருளாக்கிச்
செற்றனைசிவனண்பன்சேனையைநீயென்னாக்
கொற்றவனிளையான்மேற்கொதித்தனமொழிபோதங்கு
உற்றதையுரைசெய்வா னோடினனொருதூதன்.

     (இ - ள்.)பொன் தொடி மொழியால்-பொன்னினாலாகிய
தொடியென்னும் வளையையுடையமனைவியினதுவார்த்தையைக் கேட்டு
அதனால்,இ போது ஒரு பொருள் ஆக்கி - (எளிய) இந்தப்பூவை ஒரு
பெரும்பொருளாகக்கருதி, சிவன் நண்பன் சேனையை- சிவனது
சிநேகிதனானகுபேரனது சேனையை,நீ-, செற்றனை- அழித்தாய், என்னா
- என்று, கொற்றவன் - வெற்றியையுடைய தருமன், இளையான்மேல்-
(தன்) தம்பியான வீமன்மேல், கொதித்தன-கோபமுள்ள சிலவார்த்தைகளை,
மொழிபோது - சொல்லுகிறபொழுதில்,-அங்கு உற்றதை உரைசெய்வான் -
அவ்விடத்தில் [அப்பொழுது]நடந்த இச்செய்கையைச் சொல்லும் பொருட்டு,
ஒருதூதன்-, ஓடினன் - (குபேரனிடம்) விரைந்து சென்றான்;(எ-று.)-
பொற்றொடி-வேற்றுமைத்தொகையன்மொழி. நிகழ்செய்தியைச்
சொல்வதனால்,சொல்பவனை'தூதன்'என்றார்.                (579)

78.-சென்ற தூதுவன்போர்க்களத்து
நிகழ்ந்ததையெல்லாம் குபேரனிடங் கூறுதல்.

அழுதறல்குதிபாயுங் கண்ணினனயிலம்பால்
உழுதுடன்முழுதெல்லா முடனுகுசெம்புண்ணீர்
வழிதரமனமெல்லா மறுகுறவிறைபொற்றாள்
தொழுதனனியல்பெல்லாந் துணிவுறும்வகைசொன்னான்.

     (இ - ள்.)(சென்ற தூதுவன்),-அழுது அறல் குதி பாயும் கண்ணினன்
- (தனது இனத்தவர்பலரும்அழிந்த சோகத்தால்) புலம்பி
அச்சோகக்கண்ணீர் பெருகுகின்ற கண்களையுடையவனாய்,அயில் அம்பால்
உழுது உடல்முழுது எல்லாம் உடன் உகு செம் புண்நீர் வழிதர -
கூர்மையான வீமனம்பினாலேதைக்கப்பட்டு (த் தனது) உடம்பு முழுவதிலும்
எங்கும் ஒருங்குபெருகுகிற சிவந்தஇரத்தஞ் சொரியவும், மனம் எல்லாம்
மறுகுற - (தனது) மனம்முழுவதுங் கலங்கவும், இறை பொன் தாள்
தொழுதனன்-(தனது) தலைவனானகுபேரனது அழகிய பாதங்களைவணங்கி,
இயல்பு எல்லாம் - நடந்த செய்கைமுழுவதையும், துணிவு உறும் வகை -
நிச்சயமாக அறியும்படி, சொன்னான்- கூறினான்;(எ - று.)

     புண்ணீர் -புண்ணோடுசம்பந்தப்பட்ட நீர்;எனவே, இரத்தமாம்.
எல்லாம்என்பது, இங்குப் பலபொருள்குறியாது ஒருபொருளின் பலவிடங்
குறித்துநின்றது.  அம்புபடும்பொழுதே புண்ணும் உடனே நிகழுமென்க.
ஊனுடனுகுபுண்ணீர் என்றும் பாடம்.                             (580)