பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்367

வேறு.

79.-குபேரன் சினந்துசிலகூறலுறுதல்.

அழுங்கினான்மன்னனல் லறிவு மாவியும்
மழுங்கினான்வடிவமு முடியும் வல்விடம்
விழுங்கினானெனநனி வெகுண்டு நெஞ்சுறப்
புழுங்கினானிவையிவை புகறன் மேயினான்.

     (இ-ள்.)(இங்ஙனந் தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்டு), மன்னன்-
ராஜராஜனெனப்படுகிற குபேரன், வல் விடம் விழுங்கினான்என - கொடிய
விஷத்தை யுட்கொண்டவன்போல, நல் அறிவுஉம் ஆவிஉம் அழுங்கினான்-
நல்லஉணர்ச்சியும் உயிரும் ஒடுங்கினவனாய்,வடிவம்உம் முடிஉம்
மழுங்கினான்- (தனது) உடம்பும் தலையும்ஒளி வேறுபட்டு, நனி
வெகுண்டு-மிகவுங்கோபித்து, நெஞ்சு உற புழுங்கினான்-மனம்மிகக்கொதித்து,
இவை இவை புகறல் மேயினான்- இந்தஇந்த வார்த்தைகளைச்
சொல்லுதலைப்பொருந்தினான்;(எ-று.)-அவற்றை மேல் நான்கு கவிகளிற்
கூறுகிறார்.

     இதுமுதல்இருபத்துநான்குகவிகள் - இச்சருக்கத்தின்
ஐம்பத்தைந்தாங்கவிபோன்ற கலிவிருத்தங்கள்.                   (581)

80.-இதுமுதல் மூன்றுகவிகள்-குபேரன்சினந்துகூறுவன.

ஒருவனாமானுடனோதைமாநகர்
வருவனாம்விறன்மணிமானொடுஞ்சமர்
பொருவனாமவனுயிர்பொன்றவென்றிடர்
தருவனாமென்பெயர்தனதனாகுமாம்.

நான்குகவிகள் -ஒருதொடர்.

     (இ - ள்.)மானுடன் ஒருவன்ஆம்-யாரோஒரு தனிமனிதனாம்;ஓதை
மா நகர் வருவன் ஆம் - மதில்சூழ்ந்த சிறந்த (நமது) அளகாபுரிக்கு(அவன்)
வந்திடுவனாம்;விறல் மணிமானொடுஉம்சமர் பொருவன்ஆம் -
வெற்றியையுடையமணிமானுடனே போர்செய்வானாம்;அவன் உயிர் பொன்ற
வென்றுஇடர் தருவன்ஆம்-அம்மணிமானது உயிர் ஒழியும்படி சயித்து
(நமக்கு)த்துன்பத்தை விளைப்பானாம்;(இப்படியிருக்க), என் பெயர் தனதன்
ஆகும்ஆம் - என்னுடைய பெயர் தனதனெனப்படுவதாம்! (எ - று.)

     இக்கவியிலுள்ளஆம்என்னுஞ்சொற்கள் பலவும், வியப்புப்
பொருளோடு அலட்சியத்தையும் குறிக்கின்றன;"கைத்தோடுஞ்சிறை
கற்போயை, வைத்தோ னின்னுயிர் வாழ்வானாம்,பொய்த்தோர் வில்லிகள்
போவாராம், இத்தோ டொப்பதி யாதுண்டே"எனக் கம்பராமாயணத்திலுங்
காண்க;வருகிற இரண்டுகவிகளிலும் இவ்வாறே.  வருவன், பொருவன்,
தருவன் என எதிர்காலத்தாற் கூறினது, அச்செய்கைகள்
அசம்பாவிதமானவையென்பதை விளக்கும்.  ஓதைமாநகர் என்றதனால்,
அந்நகரியின்காவல் எவர்க்குங் கடத்