தற்கரிய தென்றும்,அதனைவீமன்கடந்துவந்தது வியக்கத்தக்க தென்றும் விளங்கும். ஓதை-மதில், ஓதை-பலவகைஓசைகளையுடையஎன்றும் உரைக்கலாம். என்பெயர் தனதனாகுமாம்என்றது, எனது மிகப்பிரசித்தமான பெயரின் சிறப்புக்குச் சிறிதும் ஏற்பதன்று இச்செய்கைகள்நிகழ்வது என்றவாறாம். தநதன்-செல்வத்தைக்கொடுப்பவன்:வடசொல். (582) 81. | அடுப்பனாமளகையையறிவின்மானுடன் தொடுப்பனாம்பொருசரஞ்சூழ்ந்தசேனையைப் படுப்பனாமதுகொடுபதுமந்தன்னைவந்து எடுப்பனாமென்பெயரிராசராசனாம். |
(இ-ள்.) அறிவுஇல் மானுடன்-விவேகமில்லாத ஒருமனிதன், அளகையை அடுப்பன்ஆம்-(நமது) அளகாபுரியைச் சேருவானாம்;பொரு சரம் தொடுப்பன் ஆம்-போர்செய்வதற்குரிய அம்புகளைஎய்வானாம்; அதுகொடு-அவ்வம்பினால்,சூழ்ந்த சேனையைபடுப்பன் ஆம்- (தன்னைச்)சூழ்ந்த(நமது)சேனையைஅழிப்பானாம்; வந்து பதுமந்தன்னை எடுப்பன்ஆம் - வந்துதாமரைப்பூவை எடுத்துக்கொள்வானாம்; (இப்படியிருக்க), என் பெயர் இராசராசன்ஆம் - எனதுபெயர் இராசராச னெனப்படுவதாம்! (எ - று.) எனதுஇராசராசனென்கிற பிரசித்தமானபெயருக்குப் பொருந்துவன வல்ல, இத்தொழில்க ளென்பதாம். ராஜராஜனென்னும் வடசொல்லுக்கு- இயக்கர்க்கு அரச னென்று பொருள்:ராஜர்-யக்ஷர். (583) 82. | இந்திரனல்லனாமீசனல்லனாம் சந்திரனல்லனாந்தபனனல்லனாம் வந்தொருவலியிலா மானுடன்கொலாம் கந்தருவரையெலாங் களத்தினூறுவான். |
(இ-ள்.)(வந்த ஆள்), இந்திரன் அல்லன்ஆம்-தேவேந்திரனல்லனாம்; ஈசன் அல்லன்ஆம்-சிவபெருமானல்லனாம்;சந்திரன் அல்லன் ஆம் தபனன் அல்லன்ஆம் - சந்திரசூரியரல்லனாம்;ஒரு வலி இலாமானுடன்கொல் ஆம் - வலிமையில்லாத ஒருமனிதனாம்;வந்து - (இங்கு) வந்து, கந்தருவரை எலாம்-, களத்தில் நூறுவான்-போர்க்களத்தில் அழிப்பானாம்!(எ - று.) முன்னிரண்டடிகளால், இந்திரன்முதற் கூறப்பட்ட நால்வரே தனது நகரத்தில் தடையின்றி வரத்தக்கவ ரென்பது விளங்கும். இந்திரன் தேவராசனாதலாலும்,சிவன் குபேரனுக்குநண்ப னாதலாலும்,சந்திரசூரியர் எங்கும் எப்பொழுதுஞ்சஞ்சரிக்குந்தன்னமய ராதலாலும் இவர்கள் அங்குச் செல்லத்தக்கவராவரென்க. தபநன் என்னும் வடசொல்லுக்கு - தபிப்பவன் [வெய்தாய்விளங்குபவன்]என்று பொருள். ஒருவலியிலாமானுடனென்றது, மனிதகணத்தாரின் ஆற்றல் தேவகணத்தாரினாற்றலினும்குறைவுபாடுடைய தென்னுங்கருத்தால். (584) |